தமிழ்நாடு

அனுமதியின்றி படப்பிடிப்பு தடுத்து நிறுத்திய போலீசார்

Added : நவ 26, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி: அனுமதியின்றி நடந்த சினிமா படப்பிடிப்பை, போலீசார் தடுத்து நிறுத்தினர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில், எஸ்.ஐ., கவுதம் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். மகாலிங்கபுரம் நுழைவுவாயில் அருகே, போலீஸ் என எழுதப்பட்டு, சைரன் வைத்த வாகனம் நின்றது.'போலீஸ் உயர் அதிகாரிகளின் வாகனம் எதற்காக வந்துள்ளது.' என, போலீசார் தயக்கத்துடன் நடத்திய விசாரணையில்,
 அனுமதியின்றி படப்பிடிப்பு தடுத்து நிறுத்திய போலீசார்

பொள்ளாச்சி: அனுமதியின்றி நடந்த சினிமா படப்பிடிப்பை, போலீசார் தடுத்து நிறுத்தினர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில், எஸ்.ஐ., கவுதம் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
மகாலிங்கபுரம் நுழைவுவாயில் அருகே, போலீஸ் என எழுதப்பட்டு, சைரன் வைத்த வாகனம் நின்றது.'போலீஸ் உயர் அதிகாரிகளின் வாகனம் எதற்காக வந்துள்ளது.' என, போலீசார் தயக்கத்துடன் நடத்திய விசாரணையில், சினிமா படப்பிடிப்பு நடப்பதாகவும், படப்பிடிப்புக்கு பயன்படுத்தும் வாகனம் என்பதும் தெரியவந்தது.இதையடுத்து, படப்பிடிப்பு குழவினரிடம் போலீசார் விசாரித்தனர். புதுமுக டைரக்டர் கார்த்திக் இயக்கி, நடிகர் அசோக் செல்வன் நடிக்கும், பெயர் சூட்டப்படாத படத்தின் படப்பிடிப்பு நடப்பது தெரிய வந்தது. படப்பிடிப்புக்கு எவ்வித அனுமதியும் பெறாததும் தெரியவந்தது.அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்த போலீசார் தடை விதித்தனர்.இதையடுத்து படப்பிடிப்பு குழுவினர் 'பேக்அப்' செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X