பொது செய்தி

தமிழ்நாடு

சிங்கவரம் கோவில் மலை பாதை பணி பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்

Added : நவ 26, 2021
Share
Advertisement
செஞ்சி:சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில், உரிய முறைகளை பின்பற்றாமல் மலைப் பாதை அமைத்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவிலில் சுற்று சுவர் இடிந்து விழுந்தது, பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி அடுத்த சிங்கவரம் மலை மீது ஆறாம் நுாற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால ரங்கநாதர்குடைவரை கோவில் உள்ளது. முகூர்த்த
 சிங்கவரம் கோவில் மலை பாதை பணி  பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்

செஞ்சி:சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில், உரிய முறைகளை பின்பற்றாமல் மலைப் பாதை அமைத்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவிலில் சுற்று சுவர் இடிந்து விழுந்தது, பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி அடுத்த சிங்கவரம் மலை மீது ஆறாம் நுாற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால ரங்கநாதர்குடைவரை கோவில் உள்ளது.


முகூர்த்த நாட்கள்

வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு 25 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவர். முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடக்கும்.மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலை, ஹிந்து சமய அறநிலையத்துறை பராமரித்து வருகிறது. கோவிலுக்குச் செல்ல மலை மீது பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, அறநிலையத் துறையினர் மலைப் பாதை அமைக்க முடிவு செய்து 1 கோடி ரூபாயில் திட்டம் தயாரித்து அரசுக்கு அனுப்பினர். ஒப்புதல் வருவதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதற்கிடையே 2018ல் கிராம மக்கள், தங்களின் சொந்த முயற்சியில் மலைப் பாதைக்கான வேலைகளை துவக்கி செய்தனர்.

அப்போது, மலைப் பாதையை ஆகம விதிகளுக்கு முரணாகவும், கோவிலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் செய்வதாக, செஞ்சி போலீசில், அகில இந்திய ஹிந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் செஞ்சி ராஜா புகார் அளித்தார். இதற்கு பதில் அளித்த ஹிந்து சமய அறநிலையத் துறையினர், மலை தங்களின் கட்டுப்பாட்டில்இல்லை.வருவாய்த் துறைக்குச் சொந்தமானது என, பதில் அளித்தனர்.


குற்றச்சாட்டு

இந்நிலையில், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், 'மலைப் பாதை அமைக்க வெடி பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் கோவிலுக்கு சேதம் ஏற்படும். கோவிலின் சுற்றுச்சுவர் பாதிக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கடந்த 20ம் தேதி இம்மனுவை ஏற்று கொண்ட முதல் பெஞ்ச், தற்போதைய நிலை தொடரவும், சேதமடைந்த பகுதியை செப்பனிட தடையேதும் இல்லை எனவும், உத்தரவிட்டது.

கடந்த 19ம் தேதி பெய்த கன மழையின் போது, கோவிலின் இரண்டு இடங்களில் மதில் சுவர் சரிந்து விழுந்தது. கொடி மரம் எதிரே, பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது. இதை தற்போது சீரமைத்து வருகின்றனர்.கடந்த 21ம் தேதி செஞ்சியில் பேட்டியளித்த பா.ஜ., மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, '18ம் தேதி இரவு பாறைகளை வெடி வைத்து தகர்த்ததால் தான் சிங்கவரம் ரங்கநாதர் கோவில் சுற்று சுவர் இடிந்து விழுந்தது.

அரசின் ஒப்புதல் இன்றி சாலை அமைக்கும் பணி, அமைச்சர் மஸ்தான் தலையீட்டில் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. 'தி.மு.க., அரசு வேண்டும் என்றே கோவிலுக்கு சேதத்தை ஏற்படுத்துகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது' என, குற்றஞ்சாட்டியிருந்தார்.
அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருந்தாலும், இதுவரை நடந்துள்ள பணிகள் அரசின் எந்தத் துறையின் அனுமதியும் இல்லாமலேயே நடந்திருப்பது தவறான முன் உதாரணமாகி உள்ளது.

எனவே, இதுவரை நடந்துள்ள பணிகளால், கோவிலுக்கு எதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை இந்திய தொல்லியல் துறையின் வல்லுனர் குழுவை கொண்டு தமிழக அரசு ஆய்வு செய்து, கோவிலின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். 'வரும் காலங்களில் தகுந்த வல்லுனர் குழுவின் ஆலோசனைப்படி மலைப் பாதையை அமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


அமைச்சர் மறுப்பு

முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விதிமுறைகள் படியே பணிகள் நடக்கும். இது குறித்த குற்றச் சாட்டுகள் சரியானது இல்லை.

மஸ்தான்
சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர்
பாதுகாப்பே முக்கியம்
நான் வந்து பார்த்தபோது வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. பழமையான கோவில் என்பதால், இதை பாதுகாக்க வழக்கு தொடர்ந்தேன். கோவிலில் வசதிகள் செய்வதை விட, பாதுகாப்பு முக்கியமானது. எனவே, நீதிமன்ற வழிகாட்டுதலின் படி பணிகளை அரசு செய்ய வேண்டும்.
ரங்கராஜ் நரசிம்மன், ஸ்ரீரங்கம்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X