தமிழ்நாடு

குழாய் பதிப்பதாக ரூ.48 லட்சம் மோசடி தி.மு.க., பிரமுகர் உட்பட 6 பேர் மீது வழக்கு

Added : நவ 26, 2021
Share
Advertisement
கோவை: குடிநீர் குழாய் பதிப்பதாக கூறி பணம் மோசடி செய்த தி.மு.க., பிரமுகர் உட்பட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.கோவை மாவட்டம் சூலுார் அருகே உள்ள கண்ணம்பாளையம் பேரூராட்சியில், 2015-16ல் குடிநீர் குழாய் பதிப்பதாக கூறி முறைகேடு செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. போலீசார் விசாரணை நடத்தி, உதவி பொறியாளர் மேனகா, செயல் அலுவலர் ரேணுகா, உதவி

கோவை: குடிநீர் குழாய் பதிப்பதாக கூறி பணம் மோசடி செய்த தி.மு.க., பிரமுகர் உட்பட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.கோவை மாவட்டம் சூலுார் அருகே உள்ள கண்ணம்பாளையம் பேரூராட்சியில், 2015-16ல் குடிநீர் குழாய் பதிப்பதாக கூறி முறைகேடு செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. போலீசார் விசாரணை நடத்தி, உதவி பொறியாளர் மேனகா, செயல் அலுவலர் ரேணுகா, உதவி செயற்பொறியாளர் மகேந்திரன், ஒப்பந்ததாரர் பார்த்திபன், புவனேஸ்வரி, பேரூராட்சி தலைவர் தளபதி முருகேசன் ஆகியோர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.செயல் அலுவலராக இருந்த ரேணுகா, குடிநீர் குழாய் நீட்டிப்பு செய்வதற்கான அடிப்படை வேலையை துவக்கினார். தகுதியவற்றவர்களான பார்த்திபன், புவனேஸ்வரி ஆகியோரை ஒப்பந்ததாரர்களாக பதிவு செய்ய அனுமதித்தார்.பேரூராட்சி மன்ற நிர்வாக ஒப்புதல் இன்றி 94.5 லட்சம் ரூபாய் பணி மேற்கொள்ள மதிப்பீடும் தயார் செய்யப்பட்டது. இந்தளவு பெரிய தொகைக்கு அனுமதி வழங்க அதிகாரம் இல்லை என்பதால், பணியை 27 பிரிவுகளாக பிரித்துள்ளனர்.இந்த முறைகேடுகளுக்கு மேனகா, மகேந்திரன் ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர். பேரூராட்சி தலைவராக இருந்த தளபதி முருகேசன் மூலம் பணிகளுக்கு நிர்வாக ஒப்புதல் பெற்றுள்ளனர். டெண்டர் வெளியிட்டதும், பார்த்திபன், புவனேஸ்வரி இருவரும் டெண்டர் சமர்ப்பித்துள்ளனர்.குறைந்த தொகைக்கு டெண்டர் சமர்ப்பித்த பார்த்திபன் தேர்வு செய்யப்பட்டார்.இவ்வாறு டெண்டர் பெற்றவர், தரமற்ற குழாய்களை பதித்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் டெண்டரில் குறிப்பிட்டபடி 30,061 மீட்டர் நீளத்துக்கு குழாய் பதிக்கப்படவில்லை என்றும், முந்தைய ஆண்டு பதிக்கப்பட்ட குழாய்களை கணக்கு காட்டுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதன் மூலம் 48 லட்சத்து 10 ஆயிரத்து 265 ரூபாய் அரசு நிதி முறைகேடு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் மீதும் வழக்கு பதிய தமிழக அரசு இந்தாண்டு மார்ச் 29ல் அனுமதி வழங்கியது. இதன்படி தி.மு.க., பிரமுகரான முன்னாள் பேரூராட்சி தலைவர் தளபதி முருகேசன் உட்பட 6 பேர் மீதும் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X