பொது செய்தி

தமிழ்நாடு

வரத்து கால்வாய் உடைப்பால் மருதன் கண்மாய் வறண்டது

Added : நவ 26, 2021
Share
Advertisement
சிவகங்கை : கல்லல் ஒன்றியம் கள்ளிப்பட்டு அருகேயுள்ள மருதன்கண்மாய் வரத்துக்கால்வாய் சொக்கநாதபுரம் அருகே உடைந்து நீர் வரத்து இல்லாததால் கண்மாய் வறண்டு போனதால் 400 ஏக்கர் பாசன நிலங்கள் பாதிப்படைந்துள்ளது.ஏரிவயல்கண்மாய் நிறைந்து அதிலிருந்து வெளியேறும் நீர் மணிமுத்தாற்றில் ஓடுகிறது. தற்போது மணிமுத்தாறு மூலம் பயன்பெறும் அனைத்து கண்மாய்களும் நிறைந்து வரும் நிலையில்

சிவகங்கை : கல்லல் ஒன்றியம் கள்ளிப்பட்டு அருகேயுள்ள மருதன்கண்மாய் வரத்துக்கால்வாய் சொக்கநாதபுரம் அருகே உடைந்து நீர் வரத்து இல்லாததால் கண்மாய் வறண்டு போனதால் 400 ஏக்கர் பாசன நிலங்கள் பாதிப்படைந்துள்ளது.

ஏரிவயல்கண்மாய் நிறைந்து அதிலிருந்து வெளியேறும் நீர் மணிமுத்தாற்றில் ஓடுகிறது. தற்போது மணிமுத்தாறு மூலம் பயன்பெறும் அனைத்து கண்மாய்களும் நிறைந்து வரும் நிலையில் கள்ளிப்பட்டு அருகே மருதன்கண்மாய் வரத்துக்கால்வாய் குடி மராமத்துப்பணியில் துார் வாரவில்லை. இதன் காரணமாக சொக்கநாதபுரம் பகுதியில் வரத்துக்கால்வாய் உடைந்து மணிமுத்தாறு பகுதிக்கு வீணாக செல்கிறது.வரத்துக்கால்வாய் உடைப்பினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அடைக்க வேண்டும்.

தொடர்ந்து மழை காரணமாக நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து இருப்பதால் மீண்டும் கண்மாயில் நீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆறுமுகம், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் தெரிவித்ததாவது: குடிமராமத்துப்பணியின் போது மருதன் கண்மாய் வரத்துக்கால்வாய் பலப்படுத்தும் பணிகளை செய்யவில்லை. இதன் காரணமாக கண்மாய் நீர் வரத்துக்கால்வாய் உடைந்து மணிமுத்தாறில் கலந்து வருகிறது. நீர் வரத்து இருப்பதால் அதிகாரிகள் வரத்துக்கால்வாயை சீரமைத்து தண்ணீர் தேக்கி 400 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X