சிங்கம்புணரியில் வீடுகளுக்குள் மழை நீர்

Added : நவ 26, 2021
Share
Advertisement
சிங்கம்புணரி : சிங்கம்புணரி பகுதியில் பெய்த கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.இப்பகுதியில் நேற்று மாலை 4:00 மணி முதல் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலத்தெரு, குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. பஸ் நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த மக்கள் மழைக்கு ஒதுங்குவதற்கு இடம் இல்லாமல் மழையில்

சிங்கம்புணரி : சிங்கம்புணரி பகுதியில் பெய்த கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.இப்பகுதியில் நேற்று மாலை 4:00 மணி முதல் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

மேலத்தெரு, குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. பஸ் நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த மக்கள் மழைக்கு ஒதுங்குவதற்கு இடம் இல்லாமல் மழையில் நனைந்துகொண்டே நின்றனர். நேற்று வாரச்சந்தை தினம் என்பதால் மழை காரணமாக சந்தை வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகினர். கொண்டு வந்த காய்கறிகளை விற்க முடியாத நிலையில் வந்திருந்த பொதுமக்களுக்கு குறைந்த விலைக்கு காய்கறிகளை அள்ளிக் கொடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X