சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நான் எந்த தவறும் செய்யவில்லை தற்கொலை ஆசிரியர் உருக்கம்

Added : நவ 26, 2021
Share
Advertisement
கரூர்:தற்கொலை செய்து கொண்ட கரூர் பள்ளி ஆசிரியர், 'நான் எந்த தவறும் செய்யவில்லை' என, உருக்கமாக கடிதம் எழுதி வைத்துள்ளார்.கரூரைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவி, பாலியல் தொல்லையால் தற்கொலை செய்த விவகாரத்தில், விசாரிக்க கூடுதல் எஸ்.பி., கீதாஞ்சலி தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அந்த மாணவி படித்த பள்ளியில், கணித ஆசிரியராக பணியாற்றி வந்த சரவணன், 44,

கரூர்:தற்கொலை செய்து கொண்ட கரூர் பள்ளி ஆசிரியர், 'நான் எந்த தவறும் செய்யவில்லை' என, உருக்கமாக கடிதம் எழுதி வைத்துள்ளார்.
கரூரைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவி, பாலியல் தொல்லையால் தற்கொலை செய்த விவகாரத்தில், விசாரிக்க கூடுதல் எஸ்.பி., கீதாஞ்சலி தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அந்த மாணவி படித்த பள்ளியில், கணித ஆசிரியராக பணியாற்றி வந்த சரவணன், 44, திருச்சி மாவட்டம், துறையூர் அருகே செங்காட்டுப்பட்டியில் உள்ள தன் மாமனார் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.அதில், 'அனைவரும் என்னை தவறாக நினைக்கின்றனர். மாணவர்களின் முன் அவமானமாக இருக்கிறது. மாணவர் ஒருவர், என்னை பற்றி தவறாக கூறுகிறார். நான் எந்த தவறையும் செய்யவில்லை.'என்னை எல்லோரும் தவறாக நினைக்கின்றனர். ஏன் இப்படி கூறுகின்றனர் என தெரியவில்லை. நான் கோபத்தில் மாணவர்களை திட்டினேன். அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள்' என, எழுதப்பட்டிருந்தது.
மாணவி தற்கொலைக்கும், சரவணனுக்கும் தொடர்பிருக்கிறதா அல்லது வேறு காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.


ஆசிரியர் கைது

கடலுார் மாவட்டம், சேதியூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் அசோக்குமார், 55, என்பவர் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் சீண்டல் செய்துள்ளார்.மாணவியின் பெற்றோர் புகாரின்படி, சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசார், அசோக்குமாரை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X