சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிச்சயித்த பெண் 'எஸ்கேப்' ஏமாந்த வாலிபர் புலம்பல்

Added : நவ 26, 2021
Share
Advertisement
மயிலாடுதுறை:நிச்சயித்த பெண் ஓட்டம் பிடித்த நிலையில், தான் கொடுத்த நகை, மொபைல் போன், டூ - வீலரை திரும்ப தராமல் ஏமாற்றுவதாக, பெண் வீட்டார் மீது வாலிபர் புகார் அளித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், கிளியனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதம்பி, 28; வெளிநாட்டில் வேலை செய்து, சமீபத்தில் ஊர் திரும்பினார். இவருக்கு, அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை, ஜூன் 28ம் தேதி, ஊர்

மயிலாடுதுறை:நிச்சயித்த பெண் ஓட்டம் பிடித்த நிலையில், தான் கொடுத்த நகை, மொபைல் போன், டூ - வீலரை திரும்ப தராமல் ஏமாற்றுவதாக, பெண் வீட்டார் மீது வாலிபர் புகார் அளித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், கிளியனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதம்பி, 28; வெளிநாட்டில் வேலை செய்து, சமீபத்தில் ஊர் திரும்பினார். இவருக்கு, அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை, ஜூன் 28ம் தேதி, ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்.
அப்பெண்ணுக்கு 2 சவரன் செயின், 13 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன், பெண்ணின் தந்தைக்கு ஸ்பிளண்டர் பிளஸ் பைக் ஆகியவற்றை சின்னதம்பி வாங்கி கொடுத்துள்ளார். கடந்த 15ம் தேதி, பெண்ணை காணவில்லை எனவும், தேடி வருவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அப்பெண்ணுக்கு சின்னதம்பி போனில் பேசியபோது, 'நான் வரமாட்டேன், நீ வேறு பெண்ணை திருமணம் செய்து கொள். இது, என் பெற்றோருக்கும் தெரியும்' எனக் கூறி, அழைப்பை துண்டித்துள்ளார்.
ஊர் முக்கியஸ்தர்கள் வாயிலாக பேசியபோது, நிச்சயதார்த்த செலவு தொகை 50 ஆயிரம், சின்னதம்பி வாங்கி தந்த செயின், மொபைல் போன், டூ - வீலர் ஆகியவற்றை திருப்பி தந்து விடுவதாக பெண்ணின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். ஆனால், திருப்பி தராமல் அலைக்கழித்துள்ளனர்.

இது குறித்து, மணல்மேடு போலீசில் புகார் அளித்துள்ள சின்னதம்பி மற்றும் அவரது குடும்பத்தினர், தங்களது பணத்தையும், பொருட்களையும் மீட்டுத் தருமாறு கேட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X