பொது செய்தி

தமிழ்நாடு

வெளிமாநில வரத்து அதிகரிப்பு தக்காளி விலை சற்று குறைந்தது

Added : நவ 26, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:மஹாராஷ்டிராவில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று முன்தினம் ஒரு கிலோ 140 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி நேற்று கிலோ 70 முதல்- 80 ரூபாய்க்கு விற்பனையானது.கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஆந்திரா கர்நாடகா மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து காய்கறி வரத்து உள்ளது.தற்போது தமிழகம் மற்றும் ஆந்திரா கர்நாடகா
 வெளிமாநில வரத்து அதிகரிப்பு தக்காளி விலை சற்று குறைந்தது

சென்னை:மஹாராஷ்டிராவில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று முன்தினம் ஒரு கிலோ 140 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி நேற்று கிலோ 70 முதல்- 80 ரூபாய்க்கு விற்பனையானது.
கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஆந்திரா கர்நாடகா மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து காய்கறி வரத்து உள்ளது.தற்போது தமிழகம் மற்றும் ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால் விளைச்சல் பாதிக்கப் பட்டு மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து குறைந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையடுத்து நேற்று முன்தினம் வரை ஒரு கிலோ தக்காளி 120 -- 140 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் நேற்று மார்க்கெட்டிற்கு 42 லாரிகளில் தக்காளி வந்தது.இதில் ஏழு லாரி தக்காளி மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்து உள்ளது.இதையடுத்து வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சற்று குறைந்து கிலோ 70 முதல்- 80 ரூபாய்க்கு விற்பனை ஆனது.அடுத்தடுத்த நாட்களில் வரத்து அதிகரித்தால் தக்காளி விலை மேலும் குறையும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
26-நவ-202115:34:31 IST Report Abuse
Loganathan Kuttuva திருச்சி மதுரை பகுதிகளில் ஐம்பது ரூபாய்க்கு கிடைக்கிறது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X