விஷ ஊசி போட்டு டாக்டர் தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விஷ ஊசி போட்டு டாக்டர் தற்கொலை

Added : நவ 26, 2021 | கருத்துகள் (3)
Share
ராயப்பேட்டை:ராயப்பேட்டையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில், அரசு மருத்துவமனை டாக்டர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார்.சென்னை, மதுரவாயல், கிருஷ்ணா நகர் மூன்றாவது பிரதான சாலையைச் சேர்ந்தவர் மகேஸ்வரன், 34; ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, ராயப்பேட்டை, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில், அறை எண்
 விஷ ஊசி போட்டு டாக்டர் தற்கொலை

ராயப்பேட்டை:ராயப்பேட்டையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில், அரசு மருத்துவமனை டாக்டர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை, மதுரவாயல், கிருஷ்ணா நகர் மூன்றாவது பிரதான சாலையைச் சேர்ந்தவர் மகேஸ்வரன், 34; ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, ராயப்பேட்டை, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில், அறை எண் 811ல் தங்கியிருந்தார்.
நேற்று காலை ஓட்டல் ஊழியர்கள் அறையை சுத்தம் செய்யசென்றனர்.அப்போது, வெகு நேரமாக 'பெல்' அடித்தும் கதவு திறக்கப்படததால் மாற்று சாவியால், கதவை திறந்து பார்த்தனர்.அங்கு டாக்டர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே, ராயப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பரிசோதனையில் விஷ ஊசி போட்டு அவர் தற்கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X