கோர்ட் செய்தி

தமிழ்நாடு

5 ஜி அலைவரிசையால் கொரோனா உயர்நீதிமன்றம் தள்ளுபடி

Added : நவ 26, 2021
Share
Advertisement
மதுரை:5 ஜி அலைபேசி டவர்களால் கொரோனா பரவுவதாகவும், தடுக்க கொள்கை முடிவு எடுக்க அரசுக்கு உத்தரவிடக்கோரியும் தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.நாகர்கோவில் ராஜசேகர் தாக்கல் செய்த பொதுநல மனு: நான் மென்பொருள் பொறியாளர். எம்.இ.,கம்ப்யூட்டர் அறிவியல் படித்துள்ளேன். இயற்பியலில் ஆராய்ச்சி மேற்கொள்கிறேன். 2 ஜி, 3 ஜி, 4 ஜி மற்றும் 5 ஜி அலைக்கற்றைகள்

மதுரை:5 ஜி அலைபேசி டவர்களால் கொரோனா பரவுவதாகவும், தடுக்க கொள்கை முடிவு எடுக்க அரசுக்கு உத்தரவிடக்கோரியும் தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
நாகர்கோவில் ராஜசேகர் தாக்கல் செய்த பொதுநல மனு: நான் மென்பொருள் பொறியாளர். எம்.இ.,கம்ப்யூட்டர் அறிவியல் படித்துள்ளேன். இயற்பியலில் ஆராய்ச்சி மேற்கொள்கிறேன். 2 ஜி, 3 ஜி, 4 ஜி மற்றும் 5 ஜி அலைக்கற்றைகள் சுற்றுச்சூழலில் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. 5 ஜி அலைபேசி டவர் அலைவரிசை மூலம் கொரோனா பரவுகிறது.

5 ஜி இல்லாத ஆப்பிரிக்க நாடுகளில் துவக்கத்தில் கொரோனா பாதிப்பு இல்லை. 5 ஜி அலைபேசி டவர்கள் மூலம் கொரோனா வைரஸ் எதிர்காலத்தில் பரவுவதைத் தடுக்க, அரசு கொள்கை வகுக்க வேண்டும். அறிவியல்பூர்வமாக ஆய்வு நடத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு ராஜசேகர் மனு செய்தார்.
நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு: அறிவியலில் நீதிமன்றத்திற்கு போதிய நிபுணத்துவம் இல்லை. இதில் இந்நீதிமன்றம் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க இயலாது என தெரிவித்தது. மனுதாரர் வாபஸ் பெற்றார். நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X