அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., ஆட்சியிலும் ஊழல் கறைபடிந்த அதிகாரிகள் உள்ளனர்,'' :எம்.பி., ஜோதிமணி

Added : நவ 26, 2021
Share
Advertisement
கரூர்:''தி.மு.க., ஆட்சியிலும் ஊழல் கறைபடிந்த அதிகாரிகள் உள்ளனர்,'' என, எம்.பி., ஜோதிமணி குற்றம் சாட்டினார்.மத்திய அரசின் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவது தொடர்பான முகாம்களை நடத்த, கரூர் கலெக்டர் அனுமதி மறுப்பதாக கூறி, கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி ஈடுபட்டார்.அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
 தி.மு.க., ஆட்சியிலும் ஊழல் கறைபடிந்த அதிகாரிகள் உள்ளனர்,'' :எம்.பி., ஜோதிமணி

கரூர்:''தி.மு.க., ஆட்சியிலும் ஊழல் கறைபடிந்த அதிகாரிகள் உள்ளனர்,'' என, எம்.பி., ஜோதிமணி குற்றம் சாட்டினார்.
மத்திய அரசின் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவது தொடர்பான முகாம்களை நடத்த, கரூர் கலெக்டர் அனுமதி மறுப்பதாக கூறி, கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி ஈடுபட்டார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கரூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், கரூர் மாவட்டத்தில் நடத்த கலெக்டர் பிரபுசங்கர் அனுமதி வழங்கவில்லை.இது குறித்து கடிதம் வாயிலாக கேட்டபோது, 'தேவைப்பட்டால் மட்டுமே நடத்துவோம்' என, கலெக்டர் பதில் அளித்துள்ளார்.
துாத்துக்குடி எம்.பி., கனிமொழி, இந்த முகாமை நடத்தி இருக்கும் போது, இங்கு மட்டும் மறுப்பதில் உள்நோக்கம் இருக்கிறது.தமிழக அரசு நடத்தினால், இவர்கள், உபகரணம் வாங்கும் நிறுவனத்தை தேர்வு செய்கின்றனர். ஆனால், மத்திய அரசு நடத்தினால், உபகரணங்களை நேரடியாக கொண்டு வந்து விடுவார்கள் என்பதால், இவர்களால் ஊழல் செய்ய முடியாது.
தி.மு.க., ஆட்சியிலும் ஊழல் கறைபடிந்த அதிகாரிகள் இன்னும் உள்ளனர். கடந்த ஆட்சியில் போராட்டம் நடத்திய போது, அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் எங்கள் பக்கம் நின்றார். இப்போதும் நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு, அவர் கூறினார்.
கலெக்டர் பிரபு சங்கர் கூறியதாவது:மத்திய அரசு வாயிலாக மாற்றுத்திறனாளிக்கான உபகரணங்கள் வழங்கும் முகாம் மட்டுமே நடக்கிறது. ஆனால் மாவட்ட நிர்வாகம் மாற்றுத் திறனாளிகளுக்கு வங்கிக்கடன் உதவி உட்பட, 10 விதமான சலுகைகளை வழங்கும் ஒருங்கிணைந்த முகாமை நடத்தி வருகிறது.
சிறந்த உபகரணங்களை தேர்வு செய்து வழங்கி வருகிறோம். அனைத்து மக்கள் பிரநிதிகளின் கருத்துகளுக்கும் மதிப்பு கொடுக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காங்., - எம்.பி., ஜோதிமணி இரவு நேரமானதும் அங்கேயே 'பெட்ஷிட்' விரித்து படுத்து துாங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X