சம்பவம் செய்தி

தமிழ்நாடு

5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு தடுப்பூசி நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவு

Added : நவ 26, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில் 75.83 லட்சம் பேர் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் உள்ள நிலையில் மாநிலம் முழுதும் தடுப்பூசி மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை விரிவுப்படுத்துமாறு மாவட்ட கலெக்டர்களை மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் 2011 பேர் கொரோனா தொற்றால்

சென்னை:தமிழகத்தில் 75.83 லட்சம் பேர் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் உள்ள நிலையில் மாநிலம் முழுதும் தடுப்பூசி மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை விரிவுப்படுத்துமாறு மாவட்ட கலெக்டர்களை மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.
அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் 2011 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 1675 பேர் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள். அதன் அடிப்படையில் உயிரிழப்பு வாய்ப்பை அறிவதற்கான கணக்கீடு செய்யப்பட்டது.
அதில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களை காட்டிலும் தடுப்பூசி செலுத்தாதவர் களுக்கு நோய் தொற்று ஏற்பட்டால் உயிரிழப்பு வாய்ப்பு 3.5 மடங்கு அதிகமாகும்.இந்த உண்மையை பொதுமக்களுக்கு உணர்த்த வேண்டியது அவசியம். தடுப்பூசி தொடர்பான புரிதல்களையும் விழிப்புணர்வையும் மேம்படுத்துவது நம் கடமை. தமிழகத்தில் போதிய எண்ணிக்கையில் தடுப்பூசிகள் உள்ளன
.ஈரோடு நாமக்கல் சேலம் சென்னை செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேவேளையில் கோவை திருப்பூரில் அந்த விகிதம் ஏற்ற இறக்கமாக இருக்கிறது.எனவே தளர்வுகளை தவறாக பொதுமக்கள் கையாளாகாத வகையில் உரிய நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
தளர்வுகள் அளிக்கப்பட்ட பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.அதை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த வேண்டும். அதேபோல நோய் தடுப்புகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
தினசரி தொற்று 800 கீழ் குறைந்தாலும் கொரோனா பரவல் விகிதம் 1 சதவீதத்துக்கு கீழ் குறைந்தாலும் கண்காணிப்பு நடவடிக்கைகளை குறைக்கக் கூடாது. அப்போது தான் மீண்டும் தொற்று பரவல் அதிகரிப்பதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X