பொது செய்தி

தமிழ்நாடு

கடலுார் மாவட்ட பா.ம.க.,வினருக்கு ராமதாஸ் திடீர் எச்சரிக்கை

Added : நவ 26, 2021
Share
Advertisement
கடலுார்-'வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நீதி கிடைக்கும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்தார்.கடலுாரில் நேற்று நடந்த, ஒருங்கிணைந்த கடலுார் மாவட்ட பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:கடலுார் மாவட்டம் பா.ம.க., கோட்டை என்ற பெருமையை, கடந்த சட்டசபை தேர்தலில் இழந்துள்ளோம். கட்சியினரின் உள்ளடி

கடலுார்-'வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நீதி கிடைக்கும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்தார்.கடலுாரில் நேற்று நடந்த, ஒருங்கிணைந்த கடலுார் மாவட்ட பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:கடலுார் மாவட்டம் பா.ம.க., கோட்டை என்ற பெருமையை, கடந்த சட்டசபை தேர்தலில் இழந்துள்ளோம். கட்சியினரின் உள்ளடி வேலையால் இரு தொகுதிகளில் தோல்வியை தழுவினோம். மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்த முடியவில்லை. இது, மிகவும் வேதனை அளிக்கிறது.வேட்பாளர்களைகூட நிறுத்த முடியவில்லையெனில் மாவட்ட, ஒன்றிய பதவிகளில் ஏன் இருக்க வேண்டும். போட்டியிட ஆட்கள் இல்லை என சொல்லி இருந்தால் அந்தமானில் இருந்து கப்பலில் 50 பேரை அழைத்து வந்திருப்பேன். நிர்வாகிகள் முறையாக பணியாற்றவில்லை என்றால் மாடு மேய்க்கும் சிறுவர்களிடம் பதவியை கொடுத்து விடுவேன்.கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ம.க., போட்டியிட்டு 23 லட்சம் ஓட்டுகளை பெற்றது; 5.6 சதவீத ஓட்டுகள் பெற்று தமிழகத்தில் 3வது பெரிய கட்சி என, தலைவர் ஜி.கே.மணி கூறுவது வெட்கமாக உள்ளது. இனி வரும் தேர்தல்களில் வெற்றி பெற வீடு, வீடாக திண்ணை பிரசாரத்தில் பா.ம.க., வினர் ஈடுபட வேண்டும்.சமூக வலைத்தளங்களை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அன்புமணி முதல்வராக வேண்டும் என்ற நோக்கத்துடன் உழைக்க வேண்டும். வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடாக வழங்கிய 10.5 சதவீதம் சட்டசபையில் நிறைவேற்றி, அரசாணை வெளியிடப்பட்டது. அதனை ரத்து செய்ய வேண்டுமெனில் மீண்டும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஆனால், இரண்டு நீதிபதிகள் ரத்து செய்து விட்டனர். இதனை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.திறமையான வழக்கறிஞர்களை நியமித்துள்ளதால் இந்த வழக்கில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.கொரோனாவால் கடந்த 2 ஆண்டாக முடங்கி விட்டேன். இனி, முடியாமல் இருந்தாலும் கோலுான்றி சென்றாவது எனது பயணம் இறுதி வரை தொடரும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X