சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதல் திருமணம் செய்த பெண்ணை மீட்க வந்த ஆந்திரா போலீஸ்

Added : நவ 26, 2021
Share
Advertisement
திண்டிவனம்,-காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணை மீட்க, ஆந்திரா போலீசார் திண்டிவனம் வந்ததால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் டி.புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர், 31; ஆந்திரா மாநிலம் சித்துார் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யபிரபா, 28; இருவரும் சென்னையில் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்தபோது காதலித்துள்ளனர்.இந்நிலையில், திவ்யபிரபாவை காணவில்லை என

திண்டிவனம்,-காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணை மீட்க, ஆந்திரா போலீசார் திண்டிவனம் வந்ததால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் டி.புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர், 31; ஆந்திரா மாநிலம் சித்துார் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யபிரபா, 28; இருவரும் சென்னையில் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்தபோது காதலித்துள்ளனர்.இந்நிலையில், திவ்யபிரபாவை காணவில்லை என அவரது தந்தை, சித்துார் அடுத்த நாராயணவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், திவ்யபிரபா, தனசேகர் இருவரும், கடந்த மாதம் 24ம் தேதி, மயிலம் முருகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, டி.புதுப்பாக்கத்தில் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து திவ்யபிரபாவை மீட்க, அவரது தந்தையுடன், நாராயணவரம் போலீசார், நேற்று டி.புதுப்பாக்கம் கிராமத்திற்கு வந்தனர். அங்கிருந்த இருவரையும் மீட்டு, திண்டிவனம் தாசில்தார் முன்னிலையில் ஆஜர்படுத்த தாலுகா அலுவலகம் அழைத்து வந்தனர்.வேறு மாநில வழக்கு என்பதால் நீங்களே பார்த்துக்கொள்ளும்படி போலீசாரிடம், தாசில்தார் தெரிவித்தார். இதையடுத்து, காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடியிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டு, திண்டிவனத்தில் இருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் தாலுகா அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X