பொது செய்தி

தமிழ்நாடு

நடிகர் சூர்யா மீதான வழக்கு டிச., 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Added : நவ 26, 2021
Share
Advertisement
கிள்ளை,-'ஜெய்பீம்' படத்திற்கு எதிராக, நடிகர் சூர்யா உள்ளிட்ட திரைப்பட குழுவினர் மீது, மாநில வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி, தொடர்ந்த வழக்கு விசாரணை வரும் 1ம் தேதிக்கு, ஒத்தி வைக்கப்பட்டது.நடிகர் சூர்யா தயாரித்து, நடித்த 'ஜெய்பீம்' திரைப்படத்தில், வன்னியர் சமூகத்தினரை இழிவுப்படுத்தியதாக கூறி, வன்னியர் சமூகத்தினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். வன்னியர் சங்க

கிள்ளை,-'ஜெய்பீம்' படத்திற்கு எதிராக, நடிகர் சூர்யா உள்ளிட்ட திரைப்பட குழுவினர் மீது, மாநில வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி, தொடர்ந்த வழக்கு விசாரணை வரும் 1ம் தேதிக்கு, ஒத்தி வைக்கப்பட்டது.நடிகர் சூர்யா தயாரித்து, நடித்த 'ஜெய்பீம்' திரைப்படத்தில், வன்னியர் சமூகத்தினரை இழிவுப்படுத்தியதாக கூறி, வன்னியர் சமூகத்தினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி, கடந்த 23ம் தேதி, கடலுார் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சி.முட்லுாரில் உள்ள சிதம்பரம் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில், 'ஜெய்பீம்' படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.அதில், 'ஜெய்பீம்' படத்தில் வன்னியர் சமுகத்தை இழிவுப்படுத்திய நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் உள்ளிட்ட திரைப்பட குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று வந்தது. குற்றவியல் நீதித்துறை நடுவர் சக்திவேல், வழக்கு விசாரணையை வரும் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X