பொது செய்தி

தமிழ்நாடு

ஏ.கே.டி., சி.பி.எஸ்.இ., பள்ளியில் தேசிய மாணவர் கடற்படை பிரிவு துவக்க விழா

Added : நவ 26, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., நினைவு வித்யா சாகேத் சி.பி.எஸ்.இ., பள்ளியில் என்.சி.சி., தேசிய மாணவர் கடற்படை பிரிவு துவக்க விழா நடந்தது.விழாவிற்கு, பள்ளி தாளாளர் மகேந்திரன் தலைமை தாங்கி பேசினார். பள்ளி செயலாளர் லட்சுமிபிரியா, நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் சுதர்சனா வரவேற்றார். விழாவில், கடற்படை பிரிவு துணை கமாண்டர் ரவிசங்கர்,

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., நினைவு வித்யா சாகேத் சி.பி.எஸ்.இ., பள்ளியில் என்.சி.சி., தேசிய மாணவர் கடற்படை பிரிவு துவக்க விழா நடந்தது.விழாவிற்கு, பள்ளி தாளாளர் மகேந்திரன் தலைமை தாங்கி பேசினார். பள்ளி செயலாளர் லட்சுமிபிரியா, நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் சுதர்சனா வரவேற்றார். விழாவில், கடற்படை பிரிவு துணை கமாண்டர் ரவிசங்கர், தலைமை பயிற்சியாளர் ராஜசேகர் ஆகியோர் என்.சி.சி., மாணவர் கடற்படைப் பிரிவு பெயர் பலகையை திறந்து வைத்து பேசினர்.பள்ளியில், 8ம் வகுப்பிலிருந்து என்.சி.சி., கடற்படை பிரிவுக்கு 50 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிகழ்ச்சியில், என்.சி.சி., கடற்படைப்பிரிவு தொடர்பான வீடியோ திரையிட்டு காட்டப்பட்டது. தொடர்ந்து, சி.பி.எஸ்.இ.,யில் பயிலும் மாணவர்களின் எதிர்கால வளர்ச்சி மற்றும் நலன் கருதி ஏ.கே.டி., சி.பி.எஸ்.இ., பள்ளி மற்றும் சென்னை டி.ஏ.வி., பள்ளி இணைந்ததின் மூலம் முதல் கட்ட நடவடிக்கையாக என்.சி.சி., கடற்படை பிரிவு துவக்கப்பட்டுள்ளது.மேலும், மாணவ, மாணவிகளின் தனி திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு செயல்பாடுகளை எதிர்காலத்தில் அமல்படுத்துவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்தார். விழாவில், உதவி தேசியப்படை அலுவலர்கள் மணிகண்டன், தேவா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X