பொது செய்தி

தமிழ்நாடு

போலீசாருக்கு சுழற்சி முறையில் வார ஓய்வு

Added : நவ 26, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுார் மாவட்டத்தில் போலீசார் சுழற்சி முறையில் வார ஓய்வு எடுக்க, பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.போலீசார் விடுமுறையின்றி பணியில் இருப்பதால் எளிதில் நோய்வாய்ப்படுதல், மன அழுத்தம், குடும்பத்தில் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் வாரத்தில் ஒருநாள் ஓய்வு வழங்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், சட்டசபையில் காவல்துறை மானியக்

கடலுார்-கடலுார் மாவட்டத்தில் போலீசார் சுழற்சி முறையில் வார ஓய்வு எடுக்க, பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.போலீசார் விடுமுறையின்றி பணியில் இருப்பதால் எளிதில் நோய்வாய்ப்படுதல், மன அழுத்தம், குடும்பத்தில் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் வாரத்தில் ஒருநாள் ஓய்வு வழங்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கையின்போது, போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான அரசாணையை அரசு வெளியிட்டது. இதன் மூலம், 2ம் நிலை போலீசார் முதல் ஏட்டுகள் வரையில் ஒருநாள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.கடலுார் மாவட்டத்தில் வார ஓய்வு நடைமுறைப்படுத்த எஸ்.பி., சக்திகணேசன் நடவடிக்கை எடுத்துள்ளார். மாவட்டம் முழுவதும் தாலுகா போலீஸ் நிலையங்கள், அனைத்து தனிப்பிரிவுகள், ஆயுதப்படை போலீசார் வாரத்தில் ஒருநாள் ஓய்வு வழங்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.அதன்படி, சுழற்சி முறையில் ஞாயிற்றுக்கிழமை 301 பேர், திங்கள் 279, செவ்வாய் 285, புதன் 283, வியாழன் 282, வெள்ளி 281, சனிக்கிழமை 277 உட்பட 1988 போலீசார் வார ஓய்வில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X