சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.2.20 லட்சம் திருட்டு

Added : நவ 26, 2021
Share
Advertisement
விழுப்புரம்-விழுப்புரத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியரின் மொபட்டில் வைத்திருந்த ரூ.2.20 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.விழுப்புரம் அடுத்த காணை வைலாமூரை சேர்ந்தவர் நடராஜன், 43; காணையில் உள்ள தனியார் நிதி நிறுவன ஊழியர். இவர் நேற்று தனது மொபட் பெட்டியில் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை வைத்திருந்தார். விழுப்புரத்தில் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள டீ கடையில் டீ

விழுப்புரம்-விழுப்புரத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியரின் மொபட்டில் வைத்திருந்த ரூ.2.20 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.விழுப்புரம் அடுத்த காணை வைலாமூரை சேர்ந்தவர் நடராஜன், 43; காணையில் உள்ள தனியார் நிதி நிறுவன ஊழியர். இவர் நேற்று தனது மொபட் பெட்டியில் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை வைத்திருந்தார். விழுப்புரத்தில் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள டீ கடையில் டீ குடித்துவிட்டு, மாலை 4:30 மணியளவில் திரும்பி வந்து பார்த்தபோது பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.இது குறித்த புகாரின்பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். மேலும், டீ கடையில் உள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X