பொது செய்தி

தமிழ்நாடு

போலி பணி நியமன ஆணையோடு வந்த வாலிபர்

Added : நவ 26, 2021
Share
Advertisement
விழுப்புரம்-விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு, உதவியாளர் பணிக்கு போலி நியமன ஆணையோடு வந்த வாலிபரால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த களையூர் காலனியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் குமரேசன், 28; இவர், நேற்று காலை 10:00 மணிக்கு தனது தந்தையுடன், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு, பணி நியமன ஆணையோடு வந்தார். அங்கு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் மோகனை

விழுப்புரம்-விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு, உதவியாளர் பணிக்கு போலி நியமன ஆணையோடு வந்த வாலிபரால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த களையூர் காலனியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் குமரேசன், 28; இவர், நேற்று காலை 10:00 மணிக்கு தனது தந்தையுடன், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு, பணி நியமன ஆணையோடு வந்தார். அங்கு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் மோகனை சந்தித்தார். தனக்கு உதவியாளர் பணிக்கான நியமன ஆணை தபால் மூலம் வந்துள்ளது, இந்த பணி ஆணை உண்மைதானா என்பதை அறிய வந்துள்ளதாகக் கூறி, ஆணையை கொடுத்தார்.ஆணையில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கையெழுத்திட்டது போல இருந்தது. அதைப் பார்த்ததும், நேர்முக உதவியாளர் அதிர்ச்சியடைந்து, அந்த கையெழுத்து தன்னுடையது அல்ல; அது, போலி நியமன ஆணை என்பதை அறிந்து, விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, குமரேசனிடம் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், அவர், சென்னை சோழிங்கநல்லுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் கடந்த 2016ம் ஆண்டு பி.பி.ஏ., முடித்துள்ளார். பணி கிடைக்காததால், சென்னை, மறைமலை நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, வெல்டர் பணி செய்து வந்துள்ளார். அப்போது, குமரேசனுக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. குமரேசனிடம் அரசு பணி வாங்கித் தருவதாகவும், அதற்கு பணம் செலவாகும் என ஏழுமலை தெரிவித்துள்ளார்.அவர் கூறியதை நம்பிய குமரேசன், சில வாரங்களுக்கு முன் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை, ஏழுமலையிடம் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்ற அவர் சில தினங்களில், அரசு பணிக்கான நியமன ஆணை வீடு தேடி தபாலில் வரும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, கடந்த 19ம் தேதி குமரேசன் வீட்டிற்கு தபால் மூலம் பணி நியமன ஆணை வந்துள்ளது. அந்த ஆணையை போலியாக தயாரித்து குமரேசன் வீட்டிற்கு ஏழுமலை அனுப்பியது தெரியவந்தது.இதுதொடர்பாக, மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கும்படி, குமரேசனுக்கு, தாலுகா போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் அவர் புகார் அளித்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளதோடு, ஏழுமலையை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X