பொது செய்தி

இந்தியா

மின்துறை தனியார் மயமாக்கல்? அமைச்சரவையில் முக்கிய முடிவு

Added : நவ 26, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் உள்ள கேபினட் அறையில் நேற்று மாலை 6:15 மணக்கு முதல்வர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய் சரவணன்குமார், தலைமை செயலர் அஸ்வனிகுமார் மற்றும் துறை செயலர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர்

புதுச்சேரி-புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் உள்ள கேபினட் அறையில் நேற்று மாலை 6:15 மணக்கு முதல்வர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய் சரவணன்குமார், தலைமை செயலர் அஸ்வனிகுமார் மற்றும் துறை செயலர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையில் 50 சதவீத இட ஒதுக்கீடு பெறுவது, இரண்டு தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கு நிகர் நிலை பல்கலைக் கழக அந்தஸ்து வழங்குவது. மின்துறையை தனியார் மயமாக்கல், அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது. குறிப்பாக போலீஸ், கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பிட போதிய நிதியை மத்திய அரசிடம் கேட்டுப் பெறுவது.தொடர் மழை மற்றும் பெரும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சீரமைத்திட இடைக்கால நிவாரணமாக ரூ.300 கோடியை மத்திய அரசிடம் கேட்டுப் பெறுவது. கரசூரில் தொழில் பூங்கா தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.மாலை 6:15 மணி முதல் இரவு 8:30 மணிவரை நடந்த இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, கோப்பாக கவர்னருக்கு அனுப்பி ஒப்புதல் பெற முடிவு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X