பொது செய்தி

இந்தியா

அனுமதி பெறாத மனைகளை முறைப்படுத்த ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை துவக்கம்

Added : நவ 26, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டப் பகுதிக்கு வெளியில் உள்ள அனுமதி பெறாத மனைகளை ஆன்லைனில் முறைப்படுத்தும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி நேற்று துவக்கி வைத்தார்.புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கடந்த 30.1.2017 க்கு முன் நகர குழும அனுமதி பெறாமல் வாங்கி பதிவு செய்த மனைகளை முறைப்படுத்தும் திட்டத்திற்கு கடந்த 20.10.2017ம்

புதுச்சேரி-புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டப் பகுதிக்கு வெளியில் உள்ள அனுமதி பெறாத மனைகளை ஆன்லைனில் முறைப்படுத்தும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி நேற்று துவக்கி வைத்தார்.புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கடந்த 30.1.2017 க்கு முன் நகர குழும அனுமதி பெறாமல் வாங்கி பதிவு செய்த மனைகளை முறைப்படுத்தும் திட்டத்திற்கு கடந்த 20.10.2017ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.இத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்ட அனுமதி பெறாத மனைப்பிரிவுகளில் உள்ள தனி மனைகளை, உரிய கட்டணம் பெற்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் நகர அமைப்புக் குழுமங்கள், மனைகளை முறைப்படுத்தும் அனுமதியை வழங்குகிறது.இதுவரை விண்ணப்பங்களை பெறுதல், பரிசீலித்தல், கட்டணங்களைப் பெறுதல் மற்றும் முறைப்படுத்தும் அனுமதியை வழங்குதில் காலதாமதமாகிறது. இப்பணியை வேகப்படுத்தவும், தனிநபர் தலையீட்டை குறைத்திட, இத்திட்டத்தை ஆன்லைனில் மேற்கொள்ள அரசு நடவடிக்கை மேற் கொண்டது.இதற்காக தகவல் மையத்தின் தொழில் நுட்ப வசதியுடன் ஆன்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்ட துவக்க விழா நேற்று நடந்தது. நகர அமைப்பு செயலர் விக்ராந்த் ராஜா, தலைமை நகர அமைப்பாளர் மகாலிங்கம் முன்னிலை வகித்தனர்.முதல்வர் ரங்கசாமி, ஆன்லைனில், விண்ணப்பத்தை பதிவு செய்யும் திட்டத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், தேசிய தகவல் மைய தலைமை அதிகாரி தேவ் ரத்ன சுக்லா, உதவி தலைமை அதிகாரி ராஜசேகரன், தொழில் நுட்ப இயக்குனர் ஷபியுல்லா, நகர அமைப்பு குழும உறுப்பினர் செயலர் புவனேஸ்வரன், முதுநிலை நகர அமைப்பாளர் (பொறுப்பு) கந்தர் செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதன் மூலம் தனி மனைகளை முறைப்படுத்தும் பணி வேகமாக நடைபெறும். மேலும், மனித தலையீடு குறைந்து, விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் வெளிப்படைத்தன்மை உண்டாகும். ஆன்லைன் மூலம் தனி மனைகளை முறைப்படுத்த https:/obps.py.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக் கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X