பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு போலீசார் அறிவுரை

Added : நவ 26, 2021
Share
Advertisement
திருவெண்ணெய்நல்லுார்-திருவெண்ணெய்நல்லுார் அருகே பஸ்சில் தொங்கிய நிலையில் பயணம் செய்த மாணவர்களுக்கு திருவெண்ணெய்நல்லுார் போலீசார் அறிவுரை வழங்கினர்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுாரில் 5க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பள்ளிகள் உள்ளன. இங்கு சுற்றியுள்ள தக்கா, சாராயமேடு, கிராமம், ஆலங்குப்பம், அரசூர், ஏமப்பூர், சிறுவானுார், பெரியசெவலை, சின்னசெவலை

திருவெண்ணெய்நல்லுார்-திருவெண்ணெய்நல்லுார் அருகே பஸ்சில் தொங்கிய நிலையில் பயணம் செய்த மாணவர்களுக்கு திருவெண்ணெய்நல்லுார் போலீசார் அறிவுரை வழங்கினர்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுாரில் 5க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பள்ளிகள் உள்ளன. இங்கு சுற்றியுள்ள தக்கா, சாராயமேடு, கிராமம், ஆலங்குப்பம், அரசூர், ஏமப்பூர், சிறுவானுார், பெரியசெவலை, சின்னசெவலை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து 5,000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படிக்கின்றனர்.நேற்று திருவெண்ணெய்நல்லுார் - அரசூர் வழியாக சென்ற தனியார் பஸ்சில் மாணவர்கள் பஸ்சின் மேல் ஏறியும், பின்னால் ஏணியில் தொங்கியும் ஆபத்தான நிலையில் பயணம் செய்தனர்.இதையறிந்த டி.எஸ்.பி., (பயிற்சி) ஆனந்தராஜ், சப் இன்ஸ்பெக்டர் குருபரன் அந்த மாணவர்களை அழைத்து அறிவுரை வழங்கி அனுப்பினர். மேலும் மேலதிகாரிகளிடம் கூறி கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்படுமென தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X