பொது செய்தி

தமிழ்நாடு

இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலைப்பயணம்: அமைச்சர் துவக்கி வைப்பு

Added : நவ 26, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-ரோடுமாமந்துாரில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலைப்பயணம் துவங்கியது.நிகழ்ச்சிக்கு, கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், மணிக்கண்ணன் முன்னிலை வகித்தனர். சி.இ.ஓ., விஜயலட்சுமி வரவேற்றார்.இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலைப்பயண வாகனத்தை அமைச்சர் வேலு

கள்ளக்குறிச்சி-ரோடுமாமந்துாரில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலைப்பயணம் துவங்கியது.நிகழ்ச்சிக்கு, கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், மணிக்கண்ணன் முன்னிலை வகித்தனர். சி.இ.ஓ., விஜயலட்சுமி வரவேற்றார்.இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலைப்பயண வாகனத்தை அமைச்சர் வேலு கொடியசைத்து துவக்கி வைத்து பேசுகையில், 'அரசு சார்பில் இல்லம் தேடி கல்வித்திட்டத்தில், மாணவர்களின் இருப்பிடங்களுக்குச் சென்று மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை கலை நிகழ்ச்சி மூலம் தன்னார்வலர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அனைத்து பள்ளிகளும் முழுமையாக செயல்பட துவங்கிய போதிலும் கொரோனா அச்சம் காரணமாக பள்ளிக்குச் செல்லாமல் உள்ள மாணவர்கள் பயன்பெறுவதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது' என்றார்.டி.இ.ஓ.,க்கள் சிவராமன், கார்த்திகா, சுப்ரமணியன், அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள், பள்ளி துணை ஆய்வாளர்கள், சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர்கள் கோபி, ஆனந்தன், ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனியாப்பிள்ளை நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X