பொது செய்தி

தமிழ்நாடு

வடலுாரில் மனு நீதி நாள் முகாம்

Added : நவ 26, 2021
Share
Advertisement
வடலுார்--வடலுார் ஆபத்தாணபுரத்தில் மனு நீதி நாள் முகாம் நேற்று நடந்தது. வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர்கள் ரஞ்ஜித்சித், பவன்குமார் ஜி.கிரியப்பனவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மைத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்று வீட்டுமனைப் பட்டா, முதியோர்

வடலுார்--வடலுார் ஆபத்தாணபுரத்தில் மனு நீதி நாள் முகாம் நேற்று நடந்தது. வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர்கள் ரஞ்ஜித்சித், பவன்குமார் ஜி.கிரியப்பனவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மைத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்று வீட்டுமனைப் பட்டா, முதியோர் மற்றும் இதர உதவித் தொகைகள் உட்பட 448 நபர்களுக்கு ரூ. 1 கோடியே 54 லட்சத்து 10 ஆயிரத்து 998 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில், வடலுார் சத்திய ஞான சபையை சர்வதேச மையமாக அரசு அறிவித்தது. இதனால் பல நல்ல திட்டங்கள் வடலுாருக்கு கொண்டு வரப்படும். வடலுார் பேரூராட்சியில் தி.மு.க., தொடர்ந்து கைப்பற்றியது. தேர்தலிலும் பெரும் வெற்றியை பெற்றுத் தருவீர்கள் என நம்புகிறேன், என்றார். ஆர்.டி.ஓ., அதியமான் கவியரசு, தாசில்தார் சையத்அபுதாகீர், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பரந்தாமன், உதவி கோட்ட பொறியாளர் பரமேஸ்வரி, வேளாண் துறை இணை இயக்குனர் பாலசுப்பிரமணியன்.குறிஞ்சிப்பாடி வட்டார உதவி இயக்குனர் பூவராகவன், குறிஞ்சிப்பாடி பி.டி.ஓ.க்கள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். வேளாண்துறை, வேளாண் பொறியியல் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X