கடலுார்-தி.மு.க., சார்பில் கடலுார் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்கள்பெறப்பட்டது.மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கு தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில்.கடலுார் மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புவோரிடம் நேற்று விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்று, விருப்ப மனு செய்ய விண்ணப்பங்களை கட்சியினருக்கு வழங்கி, பணியை துவக்கி வைத்தார்.அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னிலையில் முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி, அவைத் தலைவர் தங்கராசு, நகர செயலாளர் ராஜா ஆகியோர் மனுக்கள் பெற்றனர்.கடலுார் மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 100க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.மாவட்ட பொருளாளர் குணசேகரன், மாணவரணி அமைப்பாளர் நடராஜன், மீனவரணி தமிழரசன். நகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் சலீம், இளைஞரணி இளையராஜா பங்கேற்றனர்.