பரங்கிப்பேட்டை-பரங்கிப்பேட்டை பேரூராட்சி தேர்தலில் போட்டியிட நேற்று தி.மு.க., நிர்வாகிகள் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.பரங்கிப்பேட்டை பேரூராட்சி தேர்தலில் வார்டு உறுப்பினருக்கு போட்டியிட நேற்று தேன்மொழி சங்கர், தி.மு.க., ஒன்றிய செயலர்கள் முத்துப்பெருமாள், ராஜேந்திரகுமார், நகர செயலர் முனவர் உசேன் ஆகியோரிடம், விருப்ப மனு தாக்கல் செய்தார்.ஒன்றிய அவைத் தலைவர் ராஜாராமன், முன்னாள் பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ், ஒன்றிய வர்த்தக அணி செயலர் சங்கர், நிர்வாகிகள் தங்கவேல், பாண்டியன், செழியன், நடராஜன், சிவபாலன், சிவ வடிவேல், ஜாபர் ஷெரீப், வேலவன், பசிரியமா ஜாபர் அலி, ஹபீப், அலி அப்பாஸ், கணேசன், பழனிகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.