சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சப் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

Added : நவ 26, 2021
Share
Advertisement
விருத்தாசலம்-விருத்தாசலம் சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இருளர் இன மக்களால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி கிராமத்தில் 50 ஆண்டுகளாக வசிக்கும் பழங்குடி இருளர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி, மா. கம்யூ., சார்பில் பாலக்கரையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, வட்ட செயலர் அசோகன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர்

விருத்தாசலம்-விருத்தாசலம் சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இருளர் இன மக்களால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி கிராமத்தில் 50 ஆண்டுகளாக வசிக்கும் பழங்குடி இருளர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி, மா. கம்யூ., சார்பில் பாலக்கரையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, வட்ட செயலர் அசோகன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் சந்திரசேகரன், வட்டக்குழு உறுப்பினர்கள் குமரகுரு, கலைச்செல்வன், வாலிபர் சங்க வட்ட செயலாளர் பரமசிவம், நகர நிர்வாகிகள் தினேஷ்குமார், சேகர், சத்யா பங்கேற்றனர்.பின்னர்,பாலக்கரையில் இருந்து பேரணியாக சென்று, சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆர்.டி.ஓ., ராம்குமார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி, மனுவாக அளிக்க கூறினார். பின், கிராம மக்கள் சப் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக ஆர்.டி.ஓ., உறுதியளித்தார். பின் அனைவரும் கலைந்து சென்றனர். சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X