நடிகர் புனித்ராஜ் குமார் ரசிகர் தற்கொலை | Dinamalar

நடிகர் புனித்ராஜ் குமார் ரசிகர் தற்கொலை

Added : நவ 26, 2021
Share
ஹாசன்-நடிகர் புனித்ராஜ் குமார் இறந்து, ஒரு மாதம் நெருங்கும் நிலையில், அவரது தீவிர ரசிகர் ஒருவர், மன அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார்.நடிகர் புனித் ராஜ்குமார், அக்டோபர் 29ல் மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவால் கன்னட திரையுலகம் ஸ்தம்பித்தது. 12க்கும் மேற்பட்ட ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த அதிர்ச்சியிலிருந்து, ரசிகர்கள் இன்னும்

ஹாசன்-நடிகர் புனித்ராஜ் குமார் இறந்து, ஒரு மாதம் நெருங்கும் நிலையில், அவரது தீவிர ரசிகர் ஒருவர், மன அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார்.நடிகர் புனித் ராஜ்குமார், அக்டோபர் 29ல் மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவால் கன்னட திரையுலகம் ஸ்தம்பித்தது. 12க்கும் மேற்பட்ட ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த அதிர்ச்சியிலிருந்து, ரசிகர்கள் இன்னும் மீளவில்லை.ஹாசனின் ராஜ்குமார் ரசிகர்கள் சங்கத்தலைவர் நாகராஜ். ராஜ்குமாரின் தீவிர ரசிகர். இவர் நடித்த வெற்றி படங்களில் ஒன்றான 'மயூரா' என்ற பெயரை, தன் மகனுக்கு சூட்டியுள்ளார்.புனித் காலமான பின், மயூரா, 34, மன அழுத்தத்துக்கு ஆளானார். இவர் நேற்று காலை தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X