மண்டபத்தில் இருந்து காதலனுடன் மணமகள் ஓட்டம்

Added : நவ 26, 2021
Share
Advertisement
ராம்நகர்-திருமணத்துக்கு முந்தைய நாள் இரவில், மண்டபத்தில் இருந்து காதலனுடன் மணமகள் ஓட்டம் பிடித்தார். இதனால் திருமணம் நின்றது.ராம்நகர் சென்னப்பட்டணாவில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் பி.இ., பட்டதாரி மணமகளுக்கு நேற்று திருமணம் நடப்பதாக இருந்தது. நேற்று முன்தினம் இரவு, மண்டபத்தில் வரவேற்பு நடந்தது. நேற்று காலையில் முகூர்த்தம் என்பதால், உறவினர்கள் மண்டபத்திலேயே

ராம்நகர்-திருமணத்துக்கு முந்தைய நாள் இரவில், மண்டபத்தில் இருந்து காதலனுடன் மணமகள் ஓட்டம் பிடித்தார். இதனால் திருமணம் நின்றது.ராம்நகர் சென்னப்பட்டணாவில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் பி.இ., பட்டதாரி மணமகளுக்கு நேற்று திருமணம் நடப்பதாக இருந்தது. நேற்று முன்தினம் இரவு, மண்டபத்தில் வரவேற்பு நடந்தது. நேற்று காலையில் முகூர்த்தம் என்பதால், உறவினர்கள் மண்டபத்திலேயே படுத்து துாங்கினர். நள்ளிரவில் அனைவரும் துாங்கி கொண்டிருக்கும் போது, யாருக்கும் தெரியாமல் மண்டபத்தில் இருந்து மணமகள் ஓட்டம் பிடித்தார். மறு நாள் காலையில் மணமகளை காணாததால், இரு குடும்பத்தாரும் அதிர்ச்சி அடைந்தனர். திருமணம் நிறுத்தப்பட்டது.மணமகள் காதலனுடன் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. திருமணம் நின்றதால் வேறு வழியின்றி மண்டபத்தை காலி செய்து சென்றனர். போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X