தக்காளி தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு

Added : நவ 26, 2021
Share
Advertisement
சிக்கபல்லாபூர்-தக்காளி தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி வாலிபர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபரின் குடும்பத்தினர் தோட்ட உரிமையாளரை அடித்து கொலை செய்தனர். சிக்கபல்லாபூர் கவுரிபிதனுார் அருகே உள்ள சிரகமட்டேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அஸ்வத் ராவ், 45. இவர் தன் தோட்டத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார்.தற்போது தக்காளிக்கு நல்ல விலை கிடைத்து

சிக்கபல்லாபூர்-தக்காளி தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி வாலிபர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபரின் குடும்பத்தினர் தோட்ட உரிமையாளரை அடித்து கொலை செய்தனர். சிக்கபல்லாபூர் கவுரிபிதனுார் அருகே உள்ள சிரகமட்டேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அஸ்வத் ராவ், 45. இவர் தன் தோட்டத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார்.தற்போது தக்காளிக்கு நல்ல விலை கிடைத்து வருவதால், அதை காப்பாற்ற தோட்டத்தை சுற்றிலும் மின் வேலி அமைத்துள்ளார்.இதை அறியாத அதே கிராமத்தை சேர்ந்த வசந்த ராவ், 29 என்பவர், நேற்று முன்தினம் இரவு தோட்டத்துக்கு சென்றார். அப்போது மின்வேலியில் உள்ள மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிர்ச்சி அடைந்த வசந்தராவ் குடும்பத்தினர், அஸ்வத் ராவ் வீட்டுக்குள் சென்று அவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். படுகாயம் அடைந்த அஸ்வத் ராவும் உயிரிழந்தார். இதனால் கிராமத்தில் பதற்ற சூழ்நிலை நிலவுகிறது. மஞ்சேனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X