பொது செய்தி

தமிழ்நாடு

இதய அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட வாலிபருக்கு, 'இம்பெல்லா' சிகிச்சை

Added : நவ 26, 2021
Share
Advertisement
சென்னை-கொரோனா தொற்றுக்கு பிந்தைய இதய அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட வாலிபருக்கு, 'இம்பெல்லா' சிகிச்சை வாயிலாக காவேரி மருத்துவமனையில் மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மருத்துவமனையின் இதய நோய் மருத்துவப் பிரிவு டாக்டர் அனந்தராமன் கூறியதாவது:கொரோனா தொற்றுக்கு பின், 18 வயது இளைஞருக்கு, இதய பாதிப்பின் அறிகுறிகள் தென்பட்டன. மருத்துவமனையில்

சென்னை-கொரோனா தொற்றுக்கு பிந்தைய இதய அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட வாலிபருக்கு, 'இம்பெல்லா' சிகிச்சை வாயிலாக காவேரி மருத்துவமனையில் மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவமனையின் இதய நோய் மருத்துவப் பிரிவு டாக்டர் அனந்தராமன் கூறியதாவது:கொரோனா தொற்றுக்கு பின், 18 வயது இளைஞருக்கு, இதய பாதிப்பின் அறிகுறிகள் தென்பட்டன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபின், பரிசோதனை செய்ததில் இதய அழற்சி பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதய அழற்சியால், உடலின் எஞ்சிய பகுதிகளுக்கு தேவைப்படுகிற ஆக்சிஜன் செறிவுள்ள ரத்தத்தை 'பம்ப்' செய்து அனுப்பும் பணி நிறுத்தப்பட்டு, மாரடைப்பு ஏற்படக்கூடும்.எனவே, ஒரு சிறிய துளை வழியாக, 'இம்பெல்லா' சாதனம் பொருத்தப்பட்டது. பின், இதயத்திற்கு ஓய்வு அளிக்கப்பட்டு, இதயத்தின் பிற உறுப்புகளுக்கு தேவையான ரத்த ஓட்டத்தையும், ஆக்சிஜன் வழங்கலையும் இம்பெல்லா சாதனம் வழங்கியது. தொடர்ந்து, ஐந்து நாட்கள் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையின் வாயிலாக, இளைஞரின் இதயம் மீண்டும் இயல்பாக செயல்பட துவங்கியது.இவ்வாறு அவர் கூறினார்.இதயவியல் நிபுணர் டாக்டர் மனோஜ் கூறுகையில், ''இதுபோன்ற பாதிப்புகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்பை ஏற்படுத்தும்.குறிப்பாக, 'இம்பெல்லா' சாதனத்தை இயக்க தேவையான நிபுணர்கள் வர தாமதமானால், சிக்கலை ஏற்படுத்தும்.காவேரி மருத்துவமனையில், இதற்கான வசதிகள் இருப்பதால், தாமதமின்றி சிகிச்சை அளித்து இளைஞரை காப்பாற்ற முடிந்தது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X