சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீக்கிரையான கார்: 9 பேர் உயிர் தப்பினர்

Added : நவ 26, 2021
Share
Advertisement
கும்மிடிப்பூண்டி--தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணித்த ஒன்பது பேர் உயிர் தப்பினர்.சென்னை, சூளைமேடு சேர்ந்தவர் ரவி, 60. ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியில் உள்ள கோவிலுக்கு குடும்பத்துடன், 'ஸ்கார்ப்பியோ' காரில் நேற்று புறப்பட்டார். காரை ரவி ஓட்டினார்; குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பயணித்தனர்.சென்னை - கோல்கட்டா தேசிய

கும்மிடிப்பூண்டி--தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணித்த ஒன்பது பேர் உயிர் தப்பினர்.சென்னை, சூளைமேடு சேர்ந்தவர் ரவி, 60. ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியில் உள்ள கோவிலுக்கு குடும்பத்துடன், 'ஸ்கார்ப்பியோ' காரில் நேற்று புறப்பட்டார். காரை ரவி ஓட்டினார்; குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பயணித்தனர்.சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கவரைப்பேட்டை அடுத்த பெருவாயல் அருகே கார் சென்ற போது, காருக்குள் இருந்து புகை வந்தது.இதையடுத்து, காரை ஓரமாக நிறுத்தி, 'பேனட்'டை திறந்து பார்த்தார். அப்போது இன்ஜின் அடிப்பகுதியில் தீப்பிடித்து எரிவது தெரிய வந்தது. உடனே சுதாரித்த அவர், காரில் இருந்த அனைவரையும் கீழே இறங்க சொன்னார்.திடீரென மளமளவென பரவிய தீயில், கார் கொளுந்து விட்டு எரிந்தது. இச்சம்பவத்தால், ஆந்திரா நோக்கி செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.கும்மிடிப்பூண்டி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் கார் முழுதும் எரிந்து நாசமானது.முற்றிலும் எரிந்து நாசமான காரை, கிரேன் மூலம் போலீசார் அப்புறப்படுத்தினர். அதன்பின் போக்குவரத்து சீரானது. கவரைப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X