-சென்னை மாநகராட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், புகைப்படம் இல்லாத வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு பணி, அனைத்து மண்டலத்திலும் தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் மாநகராட்சிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் நடத்தப்படுவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம், டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.இதையடுத்து, டிசம்பர் இறுதி வாரத்தில், தேர்தல் நடத்தப்படும். மேயர், கவுன்சிலர் பதவியேற்பு ஜனவரி துவக்கத்தில் இருக்கும் எனவும் தெரியவருகிறது.
இதை முன்னிட்டு, அனைத்து கட்சிகளும் வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது.அதே போல், சென்னை மாநகராட்சி சார்பில் தேர்தல் பணிகள் துரிதமாக நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில், 61 லட்சத்து 18 ஆயிரத்து 188 வாக்காளர்கள் உள்ளனர்.இதில், குறைந்த வாக்காளர் உள்ள வார்டாக ஆலந்துார் மண்டலம், 159வது வார்டில், 3,116 பேரும், அதிக வாக்காளர் உள்ள வார்டாக கோடம்பாக்கம் மண்டலம், 137வது வார்டில், 58 ஆயிரத்து 620 வாக்காளர்கள் உள்ளனர். க்ஷ
மாநகராட்சி முழுவதும், 5,794 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.தேர்தல் நெருங்க உள்ளதால், மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும், புகைப்படம் இல்லாத வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி, மாநகராட்சி வருவாய் துறையினர் சார்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-- நமது நிருபர்-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE