பொது செய்தி

தமிழ்நாடு

'ஸ்மார்ட் கார்டு' மோசடி உதவி கமிஷனர் எச்சரிக்கை

Added : நவ 26, 2021
Share
Advertisement
திருவொற்றியூர்-சென்னை திருவொற்றியூர் உணவு வழங்கல் துறை உதவி கமிஷனர் நிர்வாகத்தின் கீழ், 130க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகள் உள்ளன. இங்கு, ஒரு லட்சத்திற்கும் அதிகமான குடும்ப அட்டைத்தாரர்கள், பொருட்கள் வாங்கி வருகின்றனர்.இந்நிலையில், புதிய ஸ்மார்ட் கார்டு வாங்கித் தருவதாக சிலர், பொதுமக்களிடம் ஆவணங்கள், பணம் வாங்கி மோசடியில் ஈடுபடுவதாக தொடர் புகார்கள் வந்தன.இது

திருவொற்றியூர்-சென்னை திருவொற்றியூர் உணவு வழங்கல் துறை உதவி கமிஷனர் நிர்வாகத்தின் கீழ், 130க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகள் உள்ளன. இங்கு, ஒரு லட்சத்திற்கும் அதிகமான குடும்ப அட்டைத்தாரர்கள், பொருட்கள் வாங்கி வருகின்றனர்.இந்நிலையில், புதிய ஸ்மார்ட் கார்டு வாங்கித் தருவதாக சிலர், பொதுமக்களிடம் ஆவணங்கள், பணம் வாங்கி மோசடியில் ஈடுபடுவதாக தொடர் புகார்கள் வந்தன.இது குறித்து, உணவு வழங்கல் உதவி கமிஷனர் கூறியதாவது:புதிய மின்னணு குடும்ப அட்டை தொடர்பான மனுக்கள் மீது, நுகர்வோரிடம் விசாரணைக்கு வரும் அலுவலர்களிடம், உரிய அடையாள அட்டை கோருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. துறைக்கு தொடர்பில்லாத நபர்கள், விசாரணை என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுவதாக தகவல் வருகிறது. அதனால், அடையாள அட்டை இல்லாத நபர்களிடம், எந்த தகவலும் தெரிவிக்க வேண்டாம். சந்தேகம் ஏற்படின், சம்பந்தப்பட்ட நபரை போலீசில் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.மேலும் இது, ஒரு அறிவிப்பாக அச்சடிக்கப்பட்டு, அனைத்து நியாய விலைக் கடைகளிலும், முன்பக்கம் ஒட்டப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X