கோவிலுக்குள் சென்று வந்த உணர்வு மணிவேலு ஓவியங்களால் பிரமிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவிலுக்குள் சென்று வந்த உணர்வு மணிவேலு ஓவியங்களால் பிரமிப்பு

Added : நவ 26, 2021
Share
அம்பத்துார்--''கோவிலுக்குள் சென்று மூலவரை தரிசித்த உணர்வு கிடைத்தது,'' என, மணிவேலுவின் ஓவிய கண்காட்சியை பார்வையிட்ட ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் புகழாரம் சூட்டினார்.சென்னை, அம்பத்துார் தொழிற்பேட்டை, புறவழிச்சாலையில் உள்ள, 'டாட் ஸ்கூல் ஆப் டிசைன்' மற்றும் 'தினமலர்' நாளிதழ் சார்பில், இறைநெறி ஓவியர் ஆ.மணிவேலுவின், 'இறை இவர் இடம்' என்ற, ஆன்மிக ஓவிய

அம்பத்துார்--''கோவிலுக்குள் சென்று மூலவரை தரிசித்த உணர்வு கிடைத்தது,'' என, மணிவேலுவின் ஓவிய கண்காட்சியை பார்வையிட்ட ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் புகழாரம் சூட்டினார்.சென்னை, அம்பத்துார் தொழிற்பேட்டை, புறவழிச்சாலையில் உள்ள, 'டாட் ஸ்கூல் ஆப் டிசைன்' மற்றும் 'தினமலர்' நாளிதழ் சார்பில், இறைநெறி ஓவியர் ஆ.மணிவேலுவின், 'இறை இவர் இடம்' என்ற, ஆன்மிக ஓவிய கண்காட்சி, கடந்த 17ம் தேதி துவங்கியது.அடுத்த மாதம் 14ம் தேதி வரை, தினமும் காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும், இந்த கண்காட்சியில், பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.உ.பி., மாநிலம், வாரணாசி முதல் கன்னியாகுமரி வரை உள்ள பழமையான கோவில்கள் மற்றும் அவற்றின் கருவறையில், பல்வேறு அலங்காரங்களுடன் இருக்கும் வழிபாட்டு சிற்பங்களை, ஓவியர் மணிவேலு, ஓவியங்களாக வரைந்துள்ளார்.அந்த கண்காட்சியில், 52 ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், ஓவியக்கண்காட்சியை கண்டு, தரிசிக்க வருவோருக்காக, அங்குள்ள 'தினமலர்' புத்தக ஸ்டாலில், ஆன்மிகம் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்கள், விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.நேற்று மதியம், இந்த கண்காட்சியை ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் பார்டவையிட்டு பிரமித்தார்.அவர் கூறியதாவது:ஓவியர் மணிவேலு, அற்புதமான ஓவியர் என்பது அவரது தத்ரூபமான ஓவியங்கள் மூலம், நம்மால் உணர முடிகிறது. ஆன்மிக ஓவியத்துறையில், அவர் நமக்கு கிடைத்த சிறந்த படைப்பாளி.ஒவ்வொரு ஓவியத்தையும் நெருங்கி நின்று தரிசிக்கும் போது, கோவிலுக்குள் இருப்பது போன்ற, 'இறை உணர்வு' ஏற்படுகிறது. இந்த ஆன்மிக கண்காட்சி, அனைத்து தரப்பு மக்களும் ரசித்து, தரிசிக்கும் வகையில், பெரிய அளவில் கண்காட்சியாக நடத்தப்பட வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.அவருக்கு, 'டாட் ஸ்கூல் ஆப் டிசைன்' நிறுவனர் ஏ.ஆர்.ஆர்.ராமநாதன், சால்வை அணிவித்து, சுவாமி படத்தை, நினைவு பரிசாக வழங்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X