பொது செய்தி

தமிழ்நாடு

'சஸ்பெண்ட்' ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

Added : நவ 26, 2021
Share
Advertisement
திருப்போரூர்-வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததால் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட முட்டுக்காடு ஊராட்சி செயலர் வீட்டில், லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.சென்னை அடுத்த, வளர்ந்து வரும் புறநகர் பகுதியான திருப்போரூர் ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சியில், ஏழுமலை, 43, என்பவர் செயலராக பணிபுரிந்து வந்தார். இவர் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக,

திருப்போரூர்-வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததால் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட முட்டுக்காடு ஊராட்சி செயலர் வீட்டில், லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.சென்னை அடுத்த, வளர்ந்து வரும் புறநகர் பகுதியான திருப்போரூர் ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சியில், ஏழுமலை, 43, என்பவர் செயலராக பணிபுரிந்து வந்தார். இவர் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, செங்கல்பட்டு கலெக்டர் மற்றும் சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு புகார் வந்தது.இதையடுத்து, ஒரு மாதத்திற்கு முன் ஏழுலையை, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் பணியிடை நீக்கம் செய்தார். இந்நிலையில், ஏகாட்டூர், பழண்டியம்மன் கோவில் தெருவில் உள்ள ஏழுமலையின் வீட்டில், சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., யுவராஜ், ஆய்வாளர் அனிதா தலைமையில் எட்டு பேர் குழுவினர், நேற்று காலை 7:40 மணியிலிருந்து இரவு வரை சோதனை செய்தனர்.வீட்டில் இருந்த வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத் துறையினர், ஏழுமலையிடம் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X