திருவள்ளூர்-திருவள்ளூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவ மழையால், கட்டுப்பாட்டு அறைக்கு பெறப்பட்ட, 1,100 மனுக்கள் மீது, தீர்வு காணப்பட்டது.திருவள்ளூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவ மழையால், நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. பூண்டி நீர்த்தேக்கத்தில் உபரி நீர், கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஏராளமான, விவசாய நிலங்கள், நீரில் மூழ்கி உள்ளன.கட்டுப்பாட்டு அறைமாவட்டத்தில் பெய்த பலத்த மழையால், இதுவரை, இருவர் இறந்துள்ளனர்; 112 கால்நடைகளும், 1,000 கோழிகளும் இறந்துள்ளன. மேலும், 1,636 வீடுகள் சேதமடைந்து உள்ளதாக, கணக்கெடுக்கப்பட்டு உள்ளது.மாவட்டத்தில் சேத விபரங்களை, பொதுமக்கள் நேரடியாக தகவல் அளிக்க, கலெக்டர் அலுவலகத்தில், கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது.இதுவரை, 1,112 பேர், மழை சேதம் குறித்து புகார் அளித்துள்ளனர். இதில் 1,100 புகார் மீது, தீர்வு காணப்பட்டு உள்ளது. 12 மனுக்கள் நிலுவையில் உள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில், அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில், தற்போது 44 ஆண், 31 பெண் மற்றும் 82 குழந்தை என, 157 பேர் தங்கி உள்ளனர்.கலெக்டர் ஆலோசனைவடகிழக்கு பருவ மழை காரணமாக, வானிலை மையம் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை இருப்பதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து, கலெக்டர் அலுவலகத்தில், காணொலிக் காட்சி வாயிலாக, அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினருடன், கலெக்டர் ஆலோசனை நடத்தினர்.வெள்ளப்பெருக்கு போன்ற பேரிடர் ஏற்படும் சமயத்தில் பொதுமக்களை காப்பது, நிவாரணப் பணிகளை மேற்கொள்வது போன்ற தருணங்களில் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என, கலெக்டர் கேட்டுக் கொண்டார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷிணி உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE