பொது செய்தி

தமிழ்நாடு

போக்கிடம் இல்லாத ஊற்று நீர் அரசு பள்ளி வளாகத்தில் தஞ்சம்

Added : நவ 26, 2021
Share
Advertisement
பள்ளிப்பட்டு--மலையடிவாரத்தில் அமைந்துள்ள அரசு தொடக்க பள்ளி வளாகத்தில், ஊற்று நீர் தேங்கி நிற்கிறது. இதனால், மாணவர்கள் அவதி அடைந்துஉள்ளனர்.பள்ளிப்பட்டு ஒன்றியம், கோணசமுத்திரம் கிராமம், மலையடிவாரத்தில் உள்ளது. தற்போது, மலையில் இருந்து ஊற்று நீர் சுரந்து வருகிறது. இந்த ஊற்று நீர், மலையடிவாரத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கிறது.பள்ளியின் நுழைவாயில்

பள்ளிப்பட்டு--மலையடிவாரத்தில் அமைந்துள்ள அரசு தொடக்க பள்ளி வளாகத்தில், ஊற்று நீர் தேங்கி நிற்கிறது. இதனால், மாணவர்கள் அவதி அடைந்துஉள்ளனர்.பள்ளிப்பட்டு ஒன்றியம், கோணசமுத்திரம் கிராமம், மலையடிவாரத்தில் உள்ளது. தற்போது, மலையில் இருந்து ஊற்று நீர் சுரந்து வருகிறது. இந்த ஊற்று நீர், மலையடிவாரத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கிறது.பள்ளியின் நுழைவாயில் எதிரே, சாலையின் குறுக்கே சிறு பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்கு அடுத்து, கால்வாய் வசதி இல்லாததால், பள்ளியின் சுற்றுச்சுவரில் உள்ள ஓட்டை வழியாக, ஊற்று நீர், பள்ளி வளாகத்திற்குள் பாய்ந்து வருகிறது.பள்ளி வளாகம் முழுதும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. மழை நீர் கால்வாயை முறையாக துார் வாரி சீரமைத்தால், இந்த நிலை ஏற்படாது என, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X