திருத்தணி-கடந்த 40 ஆண்டுகளுக்கு பின், ஆற்காடுகுப்பம் ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாயில் உள்ள தடுப்பணைகள் அகற்றியதால் தற்போது நீர்வரத்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருவாலங்காடு ஒன்றியம், ஆற்காடுகுப்பம் கிராம ஏரியில் தண்ணீர் இருந்ததால், 300 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் பயிரிடலாம்.இந்த ஏரிக்கு, கொசஸ்தலை ஆறு மற்றும் காமாட்சியம்மன் கசிவு கால்வாய் வாயிலாக நீர்வரத்து வந்துக் கொண்டிருந்தன.ஆற்காடுகுப்பம் ஏரி நிரம்பி, உபரி நீர் கடைவாசல் வழியாக வெளியேறும் தண்ணீர் நெடும்பரம், பனப்பாக்கம் ஆகிய ஏரிகளுக்கு செல்லும்.இந்நிலையில், கொசஸ்தலை ஆறு மற்றும் கசிவு நீர் கால்வாய் வழியாக ஏரிக்கு வரும் தண்ணீர் ஆக்கிரமிப்பு மற்றும் புதைந்ததால் பல ஆண்டுகளாக தடைப்பட்டு இருந்தது.மேலும், காமாட்சியம்மன் கசிவு கால்வாயில் நான்கு இடங்களில் ஒன்றிய நிர்வாகம் தடுப்பணைகள் கட்டியது. இதனால் ஆற்காடுகுப்பம் ஏரிக்கு நீர்வரத்து கேள்விக்குறியாக இருந்தது.இந்நிலையில், ஆற்காடுகுப்பம் பா.ஜ., ஒன்றிய கவுன்சிலர் கவுசல்யா சரவணன், நீர்வரத்து கால்வாய்களை சுத்தம் செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, ஒன்றியகவுன்சிலர் கூட்டம் மற்றும் கலெக்டர் ஆகியோரிடம் பலமுறை புகார் மனு கொடுத்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம், காமாட்சியம்மன் கசிவு கால்வாயில் இருந்த தடுப்பணைகளை, ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக உடைத்து ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.கடந்த, 40 ஆண்டுகளுக்கு பின், ஆற்காடுகுப்பம் ஏரிக்கு தண்ணீர் வரத்து வந்ததால், கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE