கும்மிடிப்பூண்டி--தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானதில் அதிர்ஷ்டவசமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ௯ பேர் உயிர் தப்பினர்.சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ரவி, 60. ஆந்திர மாநிலம், சத்தியவேடு பகுதியில் உள்ள கோவிலுக்கு குடும்பத்துடன், 'ஸ்கார்ப்பியோ' காரில் நேற்று புறப்பட்டார். காரை ரவி ஓட்டி சென்றார். அதில், இரு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பயணித்தனர்.சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கவரைப்பேட்டை அடுத்த, பெருவாயல் பகுதியில் கார் சென்ற போது, கார் 'எஞ்சின்' பகுதியில் இருந்து புகை வந்தது.காரை ஓரமாக நிறுத்தி, 'பேனட்'டை திறந்து பார்த்தனர். எஞ்சின் அடியில் தீப்பற்றி எரிந்ததை கண்டு. தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். கட்டுக்கு அடங்காத நிலையில், காரில் இருந்த அனைவரும் உடமைகளுடன் கீழே இறங்கினர்.மளமளவென பரவிய தீயில் கார் முழுதும் கொளுந்து விட்டு எரிந்தது. ரோந்து பணியில் இருந்து போலீசார், ஆந்திரா நோக்கி செல்லும் சாலையில் போக்குவரத்தை நிறுத்தனர்.கார் முற்றிலும் எரிந்த போதிலும், கும்மிடிப்பூண்டி தீயணைப்பு வீரர்கள், கரும்புகையை அணைத்தனர். அதன்பின், போக்குவரத்து சீரானது.முற்றிலும் எரிந்து நாசமான காரை, கிரேன் வாயிலாக போலீசார் அப்புறப்படுத்தினர் கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.தேசிய நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE