பொது செய்தி

தமிழ்நாடு

இழப்பீடு தொகை வழங்காததால் தாசில்தார் ஆபீஸ் மீண்டும் 'ஜப்தி'

Added : நவ 26, 2021
Share
Advertisement
திருத்தணி-நிலத்திற்கு இழப்பீடு தொகை, 13.38 லட்சம் ரூபாய் வழங்காததால், திருத்தணி ஆதிதிராவிடர் நல தாசில்தார் அலுவலக பொருட்களை, நீதிமன்ற துறையினர் நேற்று மீண்டும் ஜப்தி செய்து ஆட்டோவில் ஏற்றிச் சென்றனர்.திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், மணவூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பராயன் மனைவி செல்வராணி, 50. இவருக்குச் சொந்தமான ௧.௫ ஏக்கர் நிலத்தை, 1999ம் ஆண்டு, திருத்தணி

திருத்தணி-நிலத்திற்கு இழப்பீடு தொகை, 13.38 லட்சம் ரூபாய் வழங்காததால், திருத்தணி ஆதிதிராவிடர் நல தாசில்தார் அலுவலக பொருட்களை, நீதிமன்ற துறையினர் நேற்று மீண்டும் ஜப்தி செய்து ஆட்டோவில் ஏற்றிச் சென்றனர்.திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், மணவூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பராயன் மனைவி செல்வராணி, 50. இவருக்குச் சொந்தமான ௧.௫ ஏக்கர் நிலத்தை, 1999ம் ஆண்டு, திருத்தணி ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் கையகப்படுத்தி, பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைகள் வழங்கினார்.இதற்கு இழப்பீடு தொகை வழங்காததால், செல்வராணி, 2014ல், சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். திருத்தணி சார்பு நீதிமன்ற நீதிபதி காயத்ரிதேவி, நிலம் வழங்கிய செல்வராணிக்கு, வட்டி, அசல் என, 13.38 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும், தவறும் பட்சத்தில், தாசில்தார் அலுவலக பொருள்கள் ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.இழப்பீடு தொகை வழங்காததால் செல்வராணி தன் வழக்கறிஞர், சார்பு நீதிமன்ற அமீனா நரசிம்மராஜ் ஆகியோருடன் நேற்று காலை, ஆதிதிராவிடர் நல தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று, அங்குள்ள கணினி, மேஜை, நாற்காலி போன்ற பொருட்களை எடுத்து ஆட்டோவில் ஏற்றிச் சென்றனர்.கடந்த 16ம் தேதி, இதே தாசில்தார் அலுவலகத்தில், இழப்பீடு தொகை வழங்காததால், பொருள் ஜப்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X