கொசஸ்தலை ஆற்று பாலம் மீண்டும் மீண்டும் உடைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொசஸ்தலை ஆற்று பாலம் மீண்டும் மீண்டும் உடைப்பு

Added : நவ 26, 2021
Share
திருத்தணி-கொசஸ்தலை ஆற்றில்,என்.என்.கண்டிகை தற்காலிக தரைப்பாலம் இரண்டாவது முறையாக மீண்டும் உடைந்ததால், 10 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.திருத்தணி - நாகலாபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலை, நெமிலி - என்.என்.கண்டிகை இடையே செல்லும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம், 2015ல் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது.பின், திருத்தணி நெடுஞ்சாலை

திருத்தணி-கொசஸ்தலை ஆற்றில்,என்.என்.கண்டிகை தற்காலிக தரைப்பாலம் இரண்டாவது முறையாக மீண்டும் உடைந்ததால், 10 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.திருத்தணி - நாகலாபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலை, நெமிலி - என்.என்.கண்டிகை இடையே செல்லும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம், 2015ல் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது.பின், திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் பல லட்சம் ரூபாய் செலவில் உடைந்த பாலம் அருகே தற்காலிக பாலம் அமைத்தது. அதன் வழியாக போக்குவரத்து துவங்கியது.அந்த தரைப்பாலமும், கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் மீண்டும் அடித்துச் செல்லப்பட்டது. மீண்டும், நெடுஞ்சாலை துறையினர், பல லட்சம் மதிப்பில், தற்காலிக பாலத்தை சீரமைத்து போக்குவரத்து துவங்கப்பட்டது.இந்நிலையில், 15 நாட்களாக பெய்த கன மழையால் கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மீண்டும் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.தற்காலிக பாலம் மீண்டும் மீண்டும் உடைந்ததால், 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து திருத்தணி நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கன மழை மற்றும் ஆந்திர மாநிலம், அம்மப்பள்ளி அணைக்கட்டில் இருந்து, 4,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும் தரைப்பாலம் அருகே உள்ள ஏரிகளும் நிரம்பி, உபரி நீர் ஆற்றில் வந்ததால், 10 ஆயிரம் கன அடி தண்ணீர் தற்காலிக தரைப்பாலத்தில் செல்ல முடியாததால், உடைப்பு ஏற்பட்டுள்ளது.வெள்ளம் குறைந்ததும், மீண்டும் தற்காலிக பாலம் சீரமைக்கப்படும். அங்கு உயர்மட்ட பாலமும் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X