பொது செய்தி

தமிழ்நாடு

நவ.,26: பெட்ரோல், டீசல் விலையில் 23வது நாளாக இன்றும் மாற்றமில்லை

Updated : நவ 26, 2021 | Added : நவ 26, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை: மத்திய அரசின் கலால் வரி குறைப்பால், தீபாவளிக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் 10 ரூபாயும் குறைந்த நிலையில், கடந்த 23 நாட்களாக அவற்றின் விலை மாற்றப்படாமல் உள்ளது.பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. கச்சா எண்ணெய் விலை

சென்னை: மத்திய அரசின் கலால் வரி குறைப்பால், தீபாவளிக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் 10 ரூபாயும் குறைந்த நிலையில், கடந்த 23 நாட்களாக அவற்றின் விலை மாற்றப்படாமல் உள்ளது.latest tamil newsபொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், எப்போதும் இல்லாத வகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து, இரண்டும் லிட்டருக்கு தலா, 100 ரூபாயை தாண்டி விற்பனையானது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக, டீசல் விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்ததால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாயினர்.


latest tamil news


தமிழகத்தில் இம்மாதம் 3ம் தேதி லிட்டர் பெட்ரோல் 106.66 ரூபாய்க்கும்; டீசல் 102.59 ரூபாய்க்கும் விற்பனையானது. அடுத்த நாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மத்திய அரசு, 3ம் தேதி இரவு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து உத்தரவிட்டது. இதனால், 4ம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் லிட்டருக்கு 10 ரூபாயும் குறைந்தது.

அன்று தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும்; டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனையாயின. இன்று வரை 23 நாட்களாகியும், பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படாமல் உள்ளது. இது, வாகன ஓட்டிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
selva - Chennai,இந்தியா
26-நவ-202111:53:04 IST Report Abuse
selva //இன்று வரை 23 நாட்களாகியும், பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படாமல் உள்ளது. இது, வாகன ஓட்டிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.// இது இப்படியே தொடரும்.. தேர்தல் வரும் வரை.. தோத்தால் விலை மீண்டும் குறியும், இல்லை எனில் மீண்டு உயரும்
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
26-நவ-202111:25:58 IST Report Abuse
Narayanan Kalal tax had reduced by central government. That amount has to be reduced by Tamil Nadu state government. We are wondering either this state government is functioning under Stalin? Why this benefit not given to public. for the4 past 20 days this government is earning more and more. Where is Thiyagarajan?
Rate this:
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
26-நவ-202113:17:48 IST Report Abuse
பாமரன்நானா இங்கிலிபீஸ்ல கேட்டாலாவது லாஜிக்கா இருக்கும்னு பார்த்தால்... ம்ஹூம்.. For your information... state taxes on petrol products levied over and above the product price with central taxes. So once the central tax reduces there will be retrospective reduction in state taxes as well. புரியுதோ... ??? மத்திய அரசின் வரி குறைப்பால் மாநில அரசின் வரி வருவாய் 1045 கோடி ருபாய் இந்த ஆண்டில் குறையும்னு எதிர்பார்க்கப்படுது.. ஓகேவா..???...
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
26-நவ-202110:24:35 IST Report Abuse
பாமரன் புதிய இந்தியாவை உருவாக்கும் போட்டோஷூட் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் உலகம் பூராவும் நம்ம ஊர் ரெண்டு பீசுகளை கவனிச்சிக்கிட்டு இருக்கு... அதனால எரிபொருள் விலைகள் மூன்று வாரமா ஷாக்காகி அப்பிடியே இருக்கு... மத்தபடி எண்ணெய் கம்பெனிகள் சொதந்தரமாத்தான் இருக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X