பொது செய்தி

தமிழ்நாடு

பேரூராட்சி பகுதிகள் குறைப்பு இட ஒதுக்கீட்டில் மாற்றம் ஏற்படுமா?

Added : நவ 26, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகள் குறைக்கப்பட்டு உள்ளதால், உள்ளாட்சி பதவி இட ஒதுக்கீட்டில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில், 2016ல் ஊரக உள்ளாட்சி பதவி இடங்கள் காலியாகி, நீதிமன்ற வழக்கு காரணமாக, ஐந்து ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை.தற்போது, ஊரக உள்ளாட்சி தேர்தல், கடந்த அக்டோபரில் நடத்தப்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகள் குறைக்கப்பட்டு உள்ளதால், உள்ளாட்சி பதவி இட ஒதுக்கீட்டில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில், 2016ல் ஊரக உள்ளாட்சி பதவி இடங்கள் காலியாகி, நீதிமன்ற வழக்கு காரணமாக, ஐந்து ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை.தற்போது, ஊரக உள்ளாட்சி தேர்தல், கடந்த அக்டோபரில் நடத்தப்பட்டு, மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்றனர்.அடுத்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் தயாராகும் நிலையில், பேரூராட்சிப் பகுதிகளுக்கான உள்ளாட்சி பதவி இட ஒதுக்கீடு குறித்து, சர்ச்சை ஏற்பட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்துார், பீர்க்கங்கரணை, திருநீர்மலை ஆகிய பேரூராட்சி பகுதிகள், புதிய தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், இடைக்கழிநாடு, கருங்குழி, அச்சிறுப்பாக்கம் என, ஆறு பேரூராட்சிகள் அமைந்துள்ளன.காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்துார், மாங்காடு ஆகிய பேரூராட்சி பகுதிகள், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.கடந்த 2016ல் உள்ளாட்சி தேர்தல் நடத்த முயன்றபோது, அன்றைய பேரூராட்சி பகுதிகள் எண்ணிக்கை அடிப்படையில், பேரூராட்சி தலைவர் பதவியிட ஒதுக்கீடு முடிவெடுத்திருக்கலாம். தற்போதைய தேர்தலிலும், அதே இட ஒதுக்கீடு அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.தற்போது பேரூராட்சிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ள நிலையில், தலைவர் பதவிக்கான இட ஒதுக்கீட்டை மாற்றியமைக்க வேண்டும் என, அரசியல் கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X