தார்ச் சாலை, வடிகால்வாய் அமைக்க வேண்டும்

Added : நவ 26, 2021
Share
Advertisement
கூடுவாஞ்சேரி--பெருமாட்டுநல்லுார் ஊராட்சி பகுதியில், தார்ச்சாலை மற்றும் வடிகால்வாய் இல்லாததால், பொதுமக்கள் மகிவும் பாதிக்கப்படுகின்றனர்.காட்டாங்கொளத்துார் ஒன்றியம் பெருமாட்டுநல்லுார் ஊராட்சி, சென்னையை ஒட்டியுள்ள புறநகர் பகுதி. இதன் அருகே, நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சி இருக்கிறது.புறநகரில் ஏற்பட்டு வரும் தொழில் வளர்ச்சி காரணமாக, இப்பகுதி விரிவடைந்து

கூடுவாஞ்சேரி--பெருமாட்டுநல்லுார் ஊராட்சி பகுதியில், தார்ச்சாலை மற்றும் வடிகால்வாய் இல்லாததால், பொதுமக்கள் மகிவும் பாதிக்கப்படுகின்றனர்.காட்டாங்கொளத்துார் ஒன்றியம் பெருமாட்டுநல்லுார் ஊராட்சி, சென்னையை ஒட்டியுள்ள புறநகர் பகுதி. இதன் அருகே, நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சி இருக்கிறது.புறநகரில் ஏற்பட்டு வரும் தொழில் வளர்ச்சி காரணமாக, இப்பகுதி விரிவடைந்து வருகிறது. ஏராளமான குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. ஆனால் போதிய வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.சத்ய சாய் நகர் உள்ளிட்ட பல நகர், டி.டி.சி.பி., அங்கீகாரத்துடன், பல ஆண்டுகளுக்கு முன், தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் ஏற்படுத்தப்பட்டன. இந்நிறுவனம், சாலைகள் மட்டும் அமைத்து, வடிகால்வாய் அமைக்கவில்லை.அந்த சாலைகளும் பராமரிப்பின்றி சீரழிந்து காணப்படுகிறது. ஊராட்சி நிர்வாகமும் சீரமைக்கவில்லை; மழை நீர் வடிகால்வாயையும் அமைக்கவில்லை.தற்போது சாலைகள் அழிந்து, மண் பாதையாக மாறி உள்ளது. மழைக்காலத்தில் தண்ணீர் வெளியேற கால்வாய் இன்றி இச்சாலையில் தேங்குகிறது.இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சீரழிந்த சாலையில் செல்ல முடியாமல், தடுமாறி விழுகின்றனர்.பள்ளி, கல்லுாரி மாணவர்கள், முதியோர், பெண்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.இதை விர்க்க பெருமாட்டுநல்லுாரில்தார்ச் சாலை, வடிகால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என, பொதுமக்கள், ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்துகின்றனர்; நிர்வாகம் அதை கண்டுகொள்வதில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X