தமிழ்நாடு

ஆற்றங்கரையோர கிராமங்களில் குடிநீர் சப்ளை... பாதிப்பு! கலெக்டர் அலுவலக பகுதியிலும் மக்கள் தவிப்பு

Added : நவ 26, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பாலாறு மற்றும் செய்யாற்றில் புதைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் ஆற்று தண்ணீரை பயன்படுத்தி வந்த மக்கள், தற்போது குடிநீர் கிடைக்காமல் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவசரகால நடவடிக்கை மேற்கொள்ளாமல், அதிகாரிகள் தயக்கம் காட்டி வருவதாக புகார்
ஆற்றங்கரையோர கிராமங்களில் குடிநீர் சப்ளை... பாதிப்பு! கலெக்டர் அலுவலக பகுதியிலும் மக்கள் தவிப்பு

காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பாலாறு மற்றும் செய்யாற்றில் புதைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

இதனால் ஆற்று தண்ணீரை பயன்படுத்தி வந்த மக்கள், தற்போது குடிநீர் கிடைக்காமல் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவசரகால நடவடிக்கை மேற்கொள்ளாமல், அதிகாரிகள் தயக்கம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த மழை, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் பெய்த கன மழையின் காரணமாக, பாலாறு மற்றும் செய்யாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வினாடிக்கு 1.26 லட்சம் கன அடி வரை தண்ணீர் சென்றது.ஆர்ப்பரித்து சென்ற வெள்ளத்தில், காஞ்சிபுரம் நகர குடிநீர் வினியோகத்திற்காக ஆற்றில் புதைக்கப்பட்ட குழாய்கள் அடித்துச் செல்லப்பட்டன.வினியோகம்பாலாற்றில் இருந்து தேனம்பாக்கம், ஓரிக்கை, வெங்கடாவரம் ஆகிய நீரேற்றும் நிலையங்களுக்கு சென்ற குடிநீர் குழாய் வெள்ளத்தில் சென்றதால், இப்பகுதியினருக்கு குடிநீர் வினியோகிக்கப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாநகராட்சி மக்களுக்கு, காஞ்சிபுரம் பாலாறு மற்றும் வேலுார் மாவட்டம் திருப்பாற்கடல் பகுதிகளில் இருந்து, வழக்கம் போல குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பாலாறு, செய்யாற்று தண்ணீர் வினியோகம் செய்யப்படும் ஊராட்சிகளில், தனியார் விவசாயக் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் இருந்து பொதுமக்கள் தண்ணீர் எடுத்து பயன்படுத்துகின்றனர். ஆனால் மற்ற பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் கிடைக்கவில்லை.பிரச்னை தீரும்அவசர காலத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, தற்காலிக நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் செய்யவில்லை.

அதை உடனடியாக செய்தால் குடிநீர்பிரச்னை தீரும் என, மக்கள் கூறுகின்றனர்.இது குறித்து வெங்கச்சேரி விவசாயி இ.குப்புசாமி கூறியதாவது:செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆற்றில் இருந்து எங்கள் ஊருக்கு வரும் குடிநீர் குழாய்கள் அடித்து செல்லப்பட்டன. இதனால் 10 நாட்களுக்கும் மேல் தண்ணீர் கிடைக்காமல் சிரமம் ஏற்பட்டு உள்ளது.அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று தனியார் விவசாய கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் பிடிக்கிறோம்.ஊராட்சி சார்பில் டிராக்டர் வைத்து தண்ணீர் கொடுத்தாலும் போதவில்லை. ஆற்றில் தண்ணீர் வற்றிய பின் தான், தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என, அதிகாரிகள் சமாளிக்கின்றனரே தவிர நடவடிக்கை எடுப்பதில்லை.

கோடைக் காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்போது ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் வழங்குவது போல, புதிய ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர் வழங்க வேண்டும். அதை மாவட்ட நிர்வாகம் செய்யவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.காஞ்சிபுரம் மாநகராட்சி மக்களுக்கு குடிநீர் தேவைக்காக திருப்பாற்கடல் பகுதியில் இருந்து 10 லட்சம் லிட்டர் தண்ணீர்; பாலாற்றில் இருந்து, 12 லட்சம் லிட்டர் தண்ணீர் தினமும் வினியோகிக்கப்படுகிறது. பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டதால் மூன்று நீரேற்றும் நிலையங்களில் பாதிப்பு ஏற்பட்டது. திருப்பாற்கடல் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. பாலாற்றில் அனைத்து குடிநீர் குழாய்கள், மின் கம்பிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், பாதிப்பு ஏற்பட்டது. குடிநீருக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஓரிரு நாட்களில் தண்ணீர் வழங்கப்படும்.ஆர்.கணேசன், மாநகராட்சி பொறியாளர், காஞ்சிபுரம்.விபரம் தெரியவில்லைகாஞ்சிபுரம் மாநகராட்சிக்கு குடிநீர் வினியோகிப்பதற்காக பாலாற்றில் 23 திறந்தவெளி கிணறுகள், 84 ஆழ்துளை கிணறுகளில் இருந்து, நீரேற்றும் நிலையத்திற்கு செல்லும், 56 குடிநீர் குழாய்கள், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. அதேபோல மின்கம்பிகளும் அறுந்துள்ளன. பாலாற்றில், 4 அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால், இறங்கி வேலை பார்க்க முடியவில்லை. இதனால் கிணறுகளில் உள்ள நீர் மூழ்கி மோட்டார்கள் பழுதடைந்துள்ளனவா அல்லது நல்ல நிலையில் இருக்கிறதா என, பார்க்க முடியவில்லை. தண்ணீர் வற்றிய பின் தான் பாதிப்பு விபரம் முழுமையாக தெரியும்.

தேனம்பாக்கம், நத்தப்பேட்டை ஓரிக்கை போன்ற பகுதிகளுக்கு, ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. செவிலிமேடு, ஜெம்நகர், கலெக்டர் அலுவலகம் சுற்றுப்பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க முடியாத நிலை உள்ளது. புதிய ஆழ்துளை கிணறுகள் எதுவும் அமைக்கப்படவில்லை. இவ்வாறு, மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X