ஒரு போன் போதுமே

Added : நவ 26, 2021
Share
Advertisement
* வீணாகும் லாரி தண்ணீர்மதுரை மீனாம்பாள்புரம் எல்.ஐ.சி., காலனி 2வது தெருவில் மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. பெரிய ரப்பர் குழாய் மூலம் குடங்களுக்கு நிரப்பும் போது பாதிக்கு பாதி நீர் வீணாகிறது.- அபுபக்கர், மீனாம்பாள்புரம்.* மழைநீர் சிலாப் சேதம்மதுரை மாநகராட்சி வார்டு எண் 76 வேல்முருகன் நகர் ஸ்ரீனிவாஸ் அபார்ட்மென்ட் பி பிளாக் வாசலில் மழைநீர்
ஒரு போன் போதுமே

* வீணாகும் லாரி தண்ணீர்மதுரை மீனாம்பாள்புரம் எல்.ஐ.சி., காலனி 2வது தெருவில் மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. பெரிய ரப்பர் குழாய் மூலம் குடங்களுக்கு நிரப்பும் போது பாதிக்கு பாதி நீர் வீணாகிறது.- அபுபக்கர், மீனாம்பாள்புரம்.

* மழைநீர் சிலாப் சேதம்மதுரை மாநகராட்சி வார்டு எண் 76 வேல்முருகன் நகர் ஸ்ரீனிவாஸ் அபார்ட்மென்ட் பி பிளாக் வாசலில் மழைநீர் கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள சிலாப்கள் உடைந்துள்ளதால் உள்ளே செல்ல முடியவில்லை. கால்வாய் திறந்திருப்பதால் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகிறது.- சூரியநாராயணன், வேல்முருகன் நகர்.

* படையெடுக்கும் பாம்புகள்மதுரை ஒத்தக்கடை அய்யப்பன்நகர் 4வது தெருவில் கண்மாய் தண்ணீருடன் சாக்கடை கழிவுநீர், மழைநீர் சேர்ந்து முழங்கால் அளவு தேங்கியுள்ளது. இந்த தண்ணீர் வடியாததால் பாம்புகள் படையெடுக்கின்றன. பொதுமக்கள் அச்சத்துடன் குடியிருக்கின்றனர்.- அழகர்சாமி, அய்யப்பன் நகர்.

* எரியாத தெருவிளக்குகள்மதுரை மாநகராட்சி வார்டு எண் 76 வசந்தநகர் 3வது தெருவிலுள்ள மின் கம்பம் எண் 15 ல் 20 நாட்களாக மின்விளக்கு எரியவில்லை. ரோடு இருட்டாக இருப்பதால் இரவில் பயணிப்பது அவதியாகயிருக்கிறது.- வெங்கடசுப்ரமணியன், வசந்தநகர்.

கோச்சடை நடராஜ்நகர் விரிவாக்கம் ஆபீசர்ஸ் டவுன் முதல் தெருவில் உள்ள மின்கம்பத்தில் விளக்கு சேதமடைந்தது. மின் வயரில் காகம் சிக்கி கிடந்தது. மின் விளக்கு எரியாததால் திருட்டு, வழிப்பறி அபாயம் உள்ளது.- நடராஜன், கோச்சடை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X