பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் நடமாடும் காய்கறி விற்பனை துவக்கம்

Added : நவ 26, 2021
Share
Advertisement
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு பண்டக சாலை மூலம் நடமாடும் காய்கறி சிறப்பு விற்பனை துவக்கி வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.கலெக்டர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள குறைந்த விலை தக்காளி, காய்கறி விற்பனையை பார்வையிட்ட அவர் கூறியதாவது: மார்க்கெட்டில் கிலோ ரூ.110 முதல் ரூ.130 வரை விற்கப்படும் தக்காளி, கூட்டுறவு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு பண்டக சாலை மூலம் நடமாடும் காய்கறி சிறப்பு விற்பனை துவக்கி வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.

கலெக்டர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள குறைந்த விலை தக்காளி, காய்கறி விற்பனையை பார்வையிட்ட அவர் கூறியதாவது: மார்க்கெட்டில் கிலோ ரூ.110 முதல் ரூ.130 வரை விற்கப்படும் தக்காளி, கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் காய்கறி சிறப்பு விற்பனை மூலம் ரூ.79 முதல் ரூ.100க்கு விற்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 810 கிலோ தக்காளி கொள்முதல் செய்யவும் இதை படிப்படியாக உயர்த்தி விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது போல் விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, ராஜபாளையம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, ராஜபாளையம் கூட்டுறவு விற்பனை சங்கம், சிவகாசி கூட்டுறவு விற்பனை சங்கம், ஸ்ரீவில்லிபுத்துார் கூட்டுறவு விற்பனை சங்கம், சிவகாசி கார்னேசன் லித்தோ பணியாளர்கள் கூட்டுறவு பண்டக சாலை மூலம் நடமாடும் காய்கறி சிறப்பு விற்பனை துவக்கி வைக்கப்பட்டுள்ளது, என்றார்.கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் செந்தில்குமார், கண்காணிப்பாளர்கள் ஜெய்சங்கர், சிரில் சுபாஷ், சார்பதிவாளர்கள் ராமகிருஷ்ணன், மாரீஸ்வரன், மாரியப்பன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X