தமிழ்நாடு

மாவட்டத்தில் அடித்து பெய்த அடைமழை! ஓடைகள், ரோடுகள், தெருக்கள் எங்கும் பெருக்கெடுத்த வெள்ளம்

Added : நவ 26, 2021
Share
Advertisement
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் 3 மணி நேரத்திற்கும் மேலாக இடை விடாது அடித்து பெய்த அடை மழையால் ஓடைகள் ரோடுகள், தெருக்கள் எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதியம் பின்பு மழை கொட்ட துவங்கியது.விருதுநகரில் மதியம் 1:00 மணி முதல் லேசான சாரலும், விட்டு விட்டு மிதமான மழையும் பெய்தது. மதியம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் 3 மணி நேரத்திற்கும் மேலாக இடை விடாது அடித்து பெய்த அடை மழையால் ஓடைகள் ரோடுகள், தெருக்கள் எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதியம் பின்பு மழை கொட்ட துவங்கியது.விருதுநகரில் மதியம் 1:00 மணி முதல் லேசான சாரலும், விட்டு விட்டு மிதமான மழையும் பெய்தது. மதியம் 2:30 மணி முதல் இரவு ௯:00 மணிக்கு மேலும் இடை விடாது தொடர் மழை பெய்தது. அக்ரஹாரம் தெரு, தொழிற்பேட்டை, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

ஸ்ரீவில்லிபுத்துாரில் 3:15 முதல் தொடர்ந்து 40 நிமிடம் கன மழை , தொடர்ந்து சாரல் மழை பெய்தது பஸ் ஸ்டாண்ட், பெரியமாரியம்மன் கோயில் ஆத்துக்கடை, பஜார் வீதிகளில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து ஓடியது. வீடுகளுக்குள்ளும் நீர் செல்லும் நிலை ஏற்பட்டது.அரசு மருத்துவமனையின் முன்புறம், மாரியம்மன், உழவர்சந்தை செல்லும் ரோடுகளிலும் மழைநீர் தேங்கியது. சிவகாசியில் மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மழை கொட்டி தீர்த்தது.

முக்கிய வீதிகள், மெயின் ரோடுகளில் மழைநீர் தேங்கியது. அருப்புக்கோட்டையிலும் இதே போல் தொடர் கனமழை பெய்தது.சாத்துாரில் மதியம் 1:30 மணி முதல் கனமழை பெய்தது. பஸ் ஸ்டாண்ட் வெள்ளமாக கடைகளில் மழைநீர் புகுந்தது. வியாபாரிகள் கடை பூட்டி விட்டு வெளியேறினர். பள்ளி விட்டு வீடு திரும்பிய மாணவர்கள் நனைந்த படி சென்றனர். பஸ்களில் ஓட்டை கூரைகளால் மாணவர்கள் நனைந்தப்படி பயணித்தனர் .

ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட், மகப்பேறு மருத்துவமனை, காந்தி கலைமன்றம், சங்கரன் கோவில் முக்கு, முடங்கியார் ரோடு, தென்காசி தேசிய நெடுஞ்சாலைகளில் மழைநீர் கழிவுநீருடன் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தியது. மழையால் கடம்பன்குளம், கருங்குளம் கண்மாய் நிறைந்து மறுகால் பாய்கின்றன. கொண்டனேரி கண்மாய் நிறையும் தருவாயில் உள்ளது.காரியாபட்டி, நரிக்குடி பகுதிகளிலும் காலை முதல் விட்டு விட்டு மழை பெய்த நிலையில் மதியத்திற்கு பிறகு கனமழை பெய்தது.நீர்வரத்து ஓடைகளில் அதிகளவில் மழைநீர் ஓடுகிறது. மதியம் 3:00 மணி முதல் தொடர் மழை பெய்தது.

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் காலை முதல் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. மதியம் 3:00 மணிக்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த கன மழையால் ரோடுகளில் வெள்ளம் கரை புரண்டோடியது. மெயின் பஜாரில் உள்ள கடைகளிலும் வெள்ளம் புகுந்தது. பூக்கடை பஜார் வெள்ளக் காடாக மாறியது. பள்ளிகள் விடும் நேரத்தில் பெய்த மழையால் மாணவர்கள் வீடு திரும்ப முடியாமல் திணறினர்.

வெம்பக்கோட்டை சல்வார் பட்டி அருகே உள்ள தரைப்பாலத்தில் காட்டு வெள்ளம் மூழ்கடித்து சென்றது. வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டது.இது போல் அங்குள்ள இ.பி. அலுவலகம் அருகே உள்ள தரை பாலத்தையும் தண்ணீர் மூழ்கடித்தது.-----

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X