பொது செய்தி

தமிழ்நாடு

கஸ்துாரிபாய் மருத்துவமனையை எதிர்பார்க்கும் காந்திபாளையம்

Added : நவ 26, 2021
Share
Advertisement
வேடசந்தூர் : நான்கு வழிச்சாலை பணி காரணமாக நிறுத்தப்பட்ட கல்வார்பட்டி காந்தி பாளையம் கஸ்தூரிபாய் மருத்துவமனை மீண்டும் பணிகளை துவங்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.வேடசந்தூர் - கரூர் நான்கு வழிச்சாலையில் கல்வார்பட்டி ஊராட்சியை சேர்ந்த காந்திபாளையத்தில் மேற்கண்ட மருத்துவமனை அறக்கட்டளையின் நிர்வாகத்தில் செயல்பட்டு வந்தது. சித்த மருந்துகளும்

வேடசந்தூர் : நான்கு வழிச்சாலை பணி காரணமாக நிறுத்தப்பட்ட கல்வார்பட்டி காந்தி பாளையம் கஸ்தூரிபாய் மருத்துவமனை மீண்டும் பணிகளை துவங்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

வேடசந்தூர் - கரூர் நான்கு வழிச்சாலையில் கல்வார்பட்டி ஊராட்சியை சேர்ந்த காந்திபாளையத்தில் மேற்கண்ட மருத்துவமனை அறக்கட்டளையின் நிர்வாகத்தில் செயல்பட்டு வந்தது. சித்த மருந்துகளும் தயாரிக்கப்பட்டன. இப்பகுதி மக்களின் நம்பிக்கையைப் பெற்று, பிரபலமாக விளங்கியது. இங்கு பிரசவத்திற்காக பெண்கள் வருவது தனிச்சிறப்பாக இருந்தது. பாம்புக்கடி, விஷக்கடி வைத்தியங்களுக்கும் குறைந்த கட்டணத்தில் தரமான சிகிச்சையை மக்கள் பெற்று வந்தனர்.

நெடுஞ்சாலையோரம் இருந்த இந்த மருத்துவமனை, நான்கு வழிச்சாலை பணியின்போது அகற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அதன்பிறகு இப்பகுதி மக்கள் மருத்துவ வசதிக்காக கரூர், திண்டுக்கல்லுக்கு அதிக பணம், நேரத்தை செலவிட்டு செல்கின்றனர்.தற்போது போதிய இடவசதி உள்ள நிலையில் இப்பகுதி மக்களின் நலன் கருதி, காந்திகிராம நிர்வாகம் மீண்டும் அதேபகுதியில் மருத்துவமனையை நடத்த வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X